சீமான் |கோப்புப் படம்

 
தமிழகம்

“புதிய தலைமைச் செயலக திட்டத்தை கைவிடாவிட்டால் மீனவ மக்களை திரட்டி போராட்டம்” - சீமான் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கும் திட்​டத்தை அரசு கைவி​டா​விட்​டால் மீனவ மக்​களை திரட்டி நாம் தமி​ழர் கட்சி போராட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்கப்​படும் என்று தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டிருப்​பது அதிர்ச்சி அளிக்​கிறது. தமி​ழ​கத்​துக்கு ரூ.10 லட்​சம் கோடி கடன் உள்​ள​தால் கொடுத்த வாக்​குறு​தி​களை நிறை​வேற்ற முடிய​வில்லை என்று தொடர்ந்து கூறிவ​ரும் தவெக அரசு, கடுமை​யான நிதி நெருக்​கடிக்கு மத்​தி​யில் ரூ.1,200 கோடிகளை வாரி இறைத்து அவசரக​தி​யில் புதிய தலை​மைச் செயல​கம் கட்ட வேண்​டிய அவசி​யம் என்ன?

செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் கடும் இடநெருக்​கடி​யும், போக்குவரத்து நெரிசலும் ஏற்​படு​கிறது என்​றால், சாந்​தோம் தேவால​யம், பத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி, கல்​லூரி​கள், ஏராள​மான வணிக நிறு​வனங்​கள், தொழில் மையங்​கள், மீனவ மக்​களின் வியா​பாரத் தலங்​கள் என அதை​விட அதிக இடநெருக்​கடி​யும், போக்​கு​வரத்து நெரிசலும் உள்ள பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலைமைச் ​செயல​கம் அமைக்​கப்​படு​வது மக்​களின் தேவைக்​கா? அல்​லது முதல்​வரின் தனிப்​பட்ட தேவைக்​கா?

முதல்​வரின் தனிப்​பட்ட நலனுக்​காக, நாட்டு மக்​களின் வரிப்​பணத்தை வீணடித்​து, கடும் இடநெருக்​கடி​யும், போக்​கு​வரத்து நெரிசலும், சுனாமி ஆபத்​தும் உள்ள பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்​டும். இல்​லை​யென்​றால், பாதிக்கப்படும் பட்​டினப்​பாக்​கத்​தின் 9 கிராம மீனவ மக்​களை திரட்டி மாபெரும் போராட்​டத்தை நாம் தமி​ழர் கட்சி முன்னெடுக்கும். சேலம் எட்​டு​வழிச்​சாலை, பரந்​தூர் விமான நிலை​யம், கடலில் பேனா சிலை போன்​றவற்றை அமைக்​க​விட மாட்​டோம் என்​றோம். அமைக்​கப்​பட​வில்​லை. அதே​போல் பட்டினப்​பாக்​கத்​தில் தலை​மைச் செயல​கத்தை ஒரு​போதும் அமைய​விட​மாட்​டோம். இவ்​வாறு அதில் கூறியுள்​ளார்.

SCROLL FOR NEXT