சீமான்

 
தமிழகம்

புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் பண மோசடி செய்தார்: இலங்கை எம்.பி. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: இலங்​கை​யில் இருந்து புலம்​பெயர்ந்த தமிழ் மக்​களிடம் கோடிக்​கணக்​கான ரூபாய் பணத்​தைப் பெற்​றுக் கொண்டு அவர்​களுக்கு எந்த உதவி​யும் செய்​யாமல் நாம் தமிழர் கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஏமாற்றி விட்​ட​தாக, இலங்கை நாடாளு​மன்ற உறுப்​பினர் பரபரப்பு குற்​றச்​சாட்டு சுமத்​தி​யுள்​ளார்.

இலங்கை நாடாளு​மன்ற உறுப்​பின​ரான ராம​நாதன் அர்​ஜுனன், தமிழகத்​துக்கு வருகை தந்​துள்​ளார். நேற்று சென்னை தலை​மைச் செயல​கத்​தில் தமிழக அமைச்​சர் ராஜ்மோகனை சந்​தித்​தார். பிறகு செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: இதே மே மாதத்​தில்​தான் எங்​கள் இனத்​தைச் சேர்ந்த 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் இலங்​கை​யில் கொடூர​மாக இனப்​படு​கொலை செய்​யப்​பட்​டனர். இதற்கு நீதி கிடைக்க தமிழக முதல்​வர் விஜய் எங்​களுக்கு உறு​துணை​யாக இருக்க வேண்​டும்.

தமிழக மக்​கள் வரலாறு காணாத மிகப் பெரிய மாற்​றத்​துக்கு வாக்​களித்​திருக்​கிறார்​கள். தமிழ்​நாட்​டில் இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசுகள், இலங்​கை​யில் எங்​கள் இனம் அழிக்​கப்​படும்​போது அதனை வேடிக்கை பார்த்​ததை நான் நேரடி​யாகக் கண்​டிருக்​கிறேன். அந்​தத் துயர​மான கால​கட்​டத்​தில், தற்​போதைய முதல்​வர் விஜய் எங்​களுக்​காக உண்​ணா​விரதப் போராட்​டங்​களை முன்​னெடுத்​தார். அவர் மட்​டுமல்​லாது, பல அரசி​யல்​வா​தி​கள் தமிழ் மக்​களுக்​காக அன்று குரல் கொடுத்​தார்​கள்.

ஆனால், எங்​கள் மக்​களின் வலிகளைத் தற்​போது சிலர், குறிப்​பாக நாம் தமிழர் கட்​சி​யைச் சேர்ந்த சீமான் உள்​ளிட்​டோர், தமிழக அரசி​யலில் வாக்கு வங்கி அரசி​யல் செய்​வதற்​காக மட்​டுமே பயன்​படுத்​து கிறார்​கள். எங்​களு​டைய வலிகளை யாரும் இங்கு சுயநலத்​துக்​காக விற்​பனை செய்​யக் கூடாது. ராமேசுவரத்​துக்கு அகதி​களாக வந்த எங்​கள் மக்​களைச் சந்​தித்​து, அவர்​களுக்கு ஒரு​வேளை உணவு கூட சீமான் வழங்​க​வில்​லை.

இலங்​கை​யில் இருந்து புலம்​பெயர்ந்த மக்​களிடம் கோடிக்​கணக்​கான பணத்தை சீமான் பெற்​றுக்​கொண்டு அவர்​களுக்கு எந்த உதவி​யும் செய்​யாமல் ஏமாற்றி விட்​டார். சீமானின் மகன் அமெரிக்​கா​வில் படிக்​கிறார். ஆனால், எங்​களு​டைய பிள்​ளை​கள் யாழ்ப்​பாணத்​தில் மிக மோச​மான நிலை​யில் வாழ்ந்து வரு​கிறார்​கள். தலை​வர் பிர​பாகரன் தனக்கு ஆயுதப் பயிற்சி அளித்​த​தாக​வும், ஆமைக்​கறி கொடுத்​த​தாக​வும் சீமான் கூறி வரு​வ​தில் எள்​ளள​வும் உண்​மை இல்​லை. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT