தமிழகம்

எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தால் விபரீதம் ஏற்படும்: இலங்கை மீனவரின் மிரட்டல் ஆடியோவால் அச்சம்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: எல்லை தாண்டி வந்து மீன்​பி​டித்​தால் விபரீதத்​தைச் சந்​திப்​பீர்​கள் என்ற எச்​சரிக்​கையுடன் சமூக வலை​தளங்​களில் பரவி வரும் இலங்கை மீனவரின் மிரட்​டல் ஆடியோ, தமிழக மீனவர்​களிடையே பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சர்​வ​தேச எல்லை​யைத் தாண்டி இலங்கை எல்​லைக்​குள் இர​வில் வந்த தமிழக மீனவர்​கள், இலங்கை மீனவர்​களுக்​குச் சொந்​த​மான ரூ.15 லட்​சம் மதிப்​புள்ள வலை உள்​ளிட்ட பொருட்​களை துண்டு துண்​டாக வெட்​டி​விட்​ட​தாகவும், இதைக் கண்​டித்​ததால் அவர்​கள் தங்​களது படகின் மின் விளக்​கு​களை அணைத்​து ​விட்டு தப்​பிச் சென்​றதாகவும் இலங்கை மீனவர் பேசும் ஆடியோ சமூக வலை​தளங்​களில் நேற்று வைரலானது.

மேலும், அந்த ஆடியோவில் பேசி​யிருப்​ப​தாவது: இதை பார்த்​துக்​கொண்டு நாங்​கள் அமைதி​யாக இருக்க முடி​யாது. யாழ்ப்​பாணம், தலைமன்​னார் உள்​ளிட்ட மீன்​பிடி இறங்​குதளங்​களில் இருந்து இரட்டை இன்​ஜின்​களைப் பொருத்தி, வெடிமருந்​துகளு​டன் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட படகு​களு​டன் மீனவர்​கள் தயார் நிலை​யில் இருக்​கிறோம். எல்லை தாண்டி வந்​தால் இங்​கிருந்து ஒரு படகு கூட திரும்​பாது. தாக்​குதல் நடத்​தினால் மீனவர்​கள் கடலில் செத்து மடியும் நிலை ஏற்​படும்.

உங்​கள் செயலை உடனே நிறுத்​தப் பாருங்​கள். இல்லை​யென்​றால், ஈரானில் அமெரிக்​கர்​கள் நடத்​தும் தாக்​குதலைப் போன்ற நிலை ஏற்​படும். ஏற்​கெனவே தொலைபேசி மூலம் தகவல் தெரி​வித்​துள்​ளோம். அதையும் மீறி இது நடந்​துள்​ளது. இதன்​பிறகும் எல்லை தாண்டி வந்​தால், இங்கு நாங்​கள் துடிப்​ப​தைப் போல, அங்​குள்ள மக்​களும் துடிப்​பார்​கள். அதை நாங்​கள் விரும்​பவில்லை. அப்​படிச் செய்ய வைத்​து​விடாதீர்​கள். இதை எச்​சரிக்​கை​யாக தெரி​விக்​கிறேன். இவ்​வாறு அந்த மீனவர் பேசி​யுள்​ளார்.

இதைத் தொடர்ந்து, “மீனவர்​கள் விசைப்​படகு​களில் பாது​காப்​பாகச் சென்று தொழில் செய்ய வேண்​டும்” என்று கோட்​டைப்​பட்​டினம் மீனவர் சங்​கம் சார்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இது​குறித்து புதுக்​கோட்டை மீன்​வளத் துறை உதவி இயக்​குநர் அலு​வலக அலு​வலர்​கள் கூறும்​போது, “புதுக்​கோட்டை மாவட்ட விசைப்​படகு மற்​றும் நாட்​டுப்​படகு மீனவர்​கள் யாரும் சர்​வ​தேச எல்லை​யைத் தாண்​டிச் செல்​லவோ, இலங்கை கடல் பகுதிக்​குள் நுழையவோ வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இதை மீறிச் செல்​லும் மீனவர்​கள் மீது கடும் நட​வடிக்கை மேற்​கொள்​ளப்​படும்” என்​றனர்.

இலங்கை மீனவர்​கள் சார்​பில் எச்​சரிக்கை விடுத்​துள்ள நிலை​யில், கடலுக்கு மீன்​பி​டிக்கச் செல்​லும் தமிழக மீனவர்​கள் அச்​சமடைந்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT