தமிழகம்

தமிழக மீனவர்கள் 2 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்குச் சென்ற வரப்பிர​சாதம் என்​பவரது விசைப்​படகையும், படகி​லிருந்த கம்ன்​ஸ்​டன் ராஜ், மினிட்டோ ராயப்பன் ஆகிய 2 மீனவர்​களை​யும் தலை மன்​னார் அருகே இலங்கை கடற்​படை​யினர் கடந்த மார்ச் 5 அன்று கைது செய்து நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று கிளி நொச்சி நீதி​மன்​ற நீதிப​தி, மீண்​டும் இலங்கை எல்​லைக்​குள் மீன் பிடித்​தால் அபராதம் மற்​றும் சிறை தண்​டனை அனுபவிக்க வேண்​டும் என்ற நிபந்​தனைவிதித்துவிடு​தலை செய்து உத்​தர​விட்​டார்.

அவர்​கள் இன்​னும் ஓரிரு நாட்​களில் தாயகம் திரும்​பு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

          
SCROLL FOR NEXT