சென்னை: சென்னை நகரில் சாலை விபத்துகளை தடுக்கவும், விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தொடர் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்.
இந்நிலையில், விதிமீறல்களை சம்பவ இடத்திலேயே கண்டறிந்து உடனடியாக அபராதம் விதிக்கும் வகையில் நடவடிக்கையை தீவிரப்படுத்த சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்த 10 நாட்களுக்கு சென்னையின் முக்கிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் மற்றும் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக, நம்பர் பிளேட் இல்லாமல் அல்லது விதிமுறைக்கு மாறாக நம்பர் பிளேட் பொருத்தி வாகனம் ஓட்டுபவர்கள்.
பைக்கில் 3 பேர் பயணம் செய்பவர்கள், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாதவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், சிக்னல் விதிகளை மீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.