தமிழகம்

தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க ஊதியம்: ரூ.198 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: நடந்து முடிந்த 2026 சட்​டப்​பேரவைத் தேர்​தல் பணிகளில் ஈடு​பட்ட அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​களுக்கு சிறப்பு ஊக்க ஊதி​யம் வழங்க ரூ.198 கோடி ஒதுக்​கீடு செய்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது:

நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ஒவ்​வொரு மாவட்​டத்​திலும் தேர்​தல் பணி​யில் ஈடு​பட்ட அரசு அதி​காரி​கள், ஊழியர்​கள், தற்​காலிக பணி​யாளர்​கள் ஆகியோ​ருக்கு சிறப்பு ஊக்​கத்​தொகை வழங்க அரசு அனுமதி வழங்​கி​யுள்​ளது.

அதன்​படி, மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள், தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள், உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலர், மாவட்ட வரு​வாய் அலு​வலர் (தேர்​தல்), மாவட்ட ஆட்சி​யர்​களின் நேர்​முக உதவியாளர் (தேர்​தல்), சிறப்பு வட்​டாட்​சி​யர்​கள் (தேர்​தல்) மற்​றும் துணை வட்​டாட்​சி​யர்​கள் (தேர்​தல்), மாநக​ராட்சி ஆணை​யர்​கள் மற்​றும் மண்​டல அலு​வலர்​கள், தேர்​தல் பார்​வை​யாளர்​களுக்​கான தொடர்பு அலு​வலர்​கள் ஆகியோ​ருக்கு அவர்​களின் ஒரு மாத அடிப்​படைச் சம்​பளம் (மே 1-ம் தேதி வாங்​கியது) அல்​லது அதி​கபட்​சம் ரூ.45 ஆயிரம். இதில் எது குறைவோ அந்த தொகை ஊக்​கத்​தொகை​யாக அவர்களுக்கு வழங்​கப்​படும்.

மாவட்ட தேர்​தல் பிரிவு: அதேபோல், மாவட்ட தேர்​தல் அலு​வலக தேர்​தல் பிரிவு அலு​வலர்​கள் மற்​றும் ஊழியர்​கள், வரு​வாய் கோட்​டாட்​சி​யர்​கள், வட்​டாட்​சி​யர்​கள், நக​ராட்சி ஆணை​யர்​கள், பறக்​கும்​படை மற்​றும் வீடியோ கண்​காணிப்​புக்​குழு, வீடியோ பார்​வைக்​குழு, கணக்கு குழு மற்​றும் மாதிரி நடத்தை விதி​முறைக்​குழு, உதவி செல​வின பார்​வை​யாளர்​கள் மற்​றும் நிலை​யான கண்​காணிப்​புக் குழு, மண்​டல உதவியாளர்​கள் ஆகியோ​ருக்கு அவர்​களின் ஒரு மாத அடிப்​படைச் சம்​பளம் அல்​லது அதி​கபட்​சம் ரூ.30 ஆயிரம். இதில் எது குறைவோ அந்த தொகை ஊக்க ஊதியமாக வழங்​கப்​படும்.

மாவட்ட ஆட்​சி​யரின் நேர்​முக உதவியாளர் (தேர்​தல்), தொடர்பு அலு​வலர்​கள், கிராம நிர்​வாக அலு​வலர்​கள், கிராம உதவியாளர்​கள், மாவட்ட ஆட்சி​யர் அலு​வலக வரு​வாய் பிரிவு இதர ஊழியர்​கள் ஆகியோ​ருக்கு அடிப்​படை ஊதியத்​தில் 50 சதவீதம் அல்​லது அதி​கபட்​சம் ரூ.20 ஆயிரம்- இதில் எது குறைவோ அந்த தொகையும், தகவல் தொழில்​நுட்​பத்​துறை சீனியர் புரோகிராமர்​கள், புரோகிராமர்​கள், உதவி புரோகிராமர்​கள் ஆகியோ​ருக்கு ரூ.20 ஆயிர​மும், டேட்டா ஆபரேட்​டர்​கள், பிரிவு எழுத்​தர்​கள் ஆகியோ​ருக்கு ரூ.7500-ம் சிறப்பு ஊக்​கத்​தொகை​யாக வழங்​கப்​படும்.தேர்​தல் பணி​யில் ஈடு​பட்ட அரசு அலு​வலர்​கள் மற்​றும் ஊழியர்​களுக்கு சிறப்பு ஊக்​கத்​தொகை வழங்​கு​வதற்கு அரசு ரூ.198 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​துள்​ளது.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT