தமிழகம்

சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ‘சிறப்​புத் தீவிரத் திருத்​தப் பணி’ (எஸ்​ஐஆர்) நடை​முறை​யின் கீழ், வாக்​காளர் பட்​டியலில் இது​வரை பெயர் இடம்​பெறாத விடு​பட்ட வாக்​காளர்​கள் மற்​றும் முதல்​முறை​யாக தகு​திபெறும் இளம் வாக்​காளர்​களைப் பதிவு செய்​வதற்கு சிறப்பு முகாம்​களை மேற்​கொள்ள வேண்​டுமென உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, அனைத்து மாவட்ட அதி​காரி​களு​ட​னும் காணொலிக் காட்சி வாயி​லாக ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடத்​தப்​பட்​டது. இதன்​முடி​வில், தமிழகத்​தில் உள்ள அனைத்து மாவட்​டங்​களி​லும் விடு​பட்​ட​வர்​கள் மற்​றும் தகு​தி​வாய்ந்த இளைஞர்​கள், முதல்​முறை வாக்​காளர்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் பதிவு செய்​வதற்​காக அனைத்து மாவட்​டங்​களி​லும் சிறப்பு மு​காம்​கள் நடத்​தப்​படும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT