தமிழகம்

அரசு போக்குவரத்துக்கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சவுமியா அன்புமணி கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: அரசு போக்​கு​வரத்​துக்​கழகங்​களில் பணி​யாற்​றும் ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் பாமக உறுப்​பினர் சவுமியா அன்​புமணி கோரிக்கை விடுத்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று போக்​கு​வரத்​துத்​துறை, நிதி, திட்டம், வளர்ச்​சித்​துறை, பொதுத்​துறை மானியக்​கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் பாமக உறுப்​பினர் சவுமியா அன்​புமணி பேசி​ய​தாவது: ஊழல் ஒழிப்​புக்கு அரசு எடுத்​துள்ள பல்​வேறு நடவடிக்​கைகளுக்கு பாராட்​டு​கள்.

ஊழல் ஒழிப்​புத்​துறை​யில் கூடு​தல் உதவி ஆய்​வாளர்​கள், துணை கண்​காணிப்​பாளர்​கள் நியமிக்​கப்பட வேண்​டும். சேவை உரிமை பெறும் சட்​டத்தை விரை​வாக அமல்​ படுத்த வேண்​டும்.

ஊழல் ஒழிப்​பின் பயன்​கள் பொது​மக்​களை சென்​றடைய வேண்​டு்ம். அந்த வகை​யில், மின்​துறை​யில் ஊழல் ஒழிந்​தால் மின்​கட்​ட​ணம் குறைய வேண்​டு்ம. பள்​ளிக்​கல்​வித்​துறை​யில் ஊழல் ஒழிந்​தால் பள்ளிக் கட்​ட​ணம் குறைய வேண்டு்ம்.

எம்​எல்ஏ தொகுதி மேம்​பாட்டு நிதியை ரூ.5 கோடி​யாக உயர்த்த வேண்​டும். தொகுதி மேம்​பாட்டு நிதியை குடிநீர் தூய்​மைப்​படுத்​தும் பணிக்கு (ஆர்​.ஓ.) பயன்​படுத்த முடிய​வில்​லை.

எனவே, ஆர்​.ஓ. பணிக்கு பயன்​படுத்​தும் வகை​யில் அதற்கு விதி​விலக்கு அளிக்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 106 அகதி​கள் முகாம்​களில் 57 ஆயிரம் ஈழத் தமிழர்​கள் வாழ்கிறார்​கள். அவர்​களுக்கு வீட்​டு​வசதி திட்​டம் உட்பட தேவை​யான வசதி​களை ஏற்​படுத்​திக் கொடுக்க வேண்​டும்.

பாமக தலை​வர் ராம​தாஸ் என்னை தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு ஈழத்​தமிழர் நலன் குறித்து சட்​டப்​பேர​வை​யில் பேசு​மாறு சொன்​னார்.

கிராமங்​களில் மினி பேருந்​துகளை இயக்க வேண்​டு்ம். மகளிர் இலவசபேருந்து பயணத்திட்​டத்தை தனி​யார் பேருந்​துகளுக்​கும் நீட்​டிக்க வேண்​டும்.

அரசு போக்​கு​வரத்​துக்​கழகங்​களில் பணிபுரியும் ஒப்​பந்ததொழிலா​ளர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என அவர் பேசினார்.

SCROLL FOR NEXT