தமிழகம்

​பாமக பேரவை குழுத் தலைவர் சவுமியா அன்புமணி

செய்திப்பிரிவு

சென்னை: பாமக சட்​டப்​பேரவை குழு தலை​வ​ராக சவுமியா அன்புமணி தேர்வு செய்​யப்​பட்​டு உள்​ளார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தரு​மபுரி தொகு​தி​யில் பாமக தலைவர் அன்​புமணி​யின் மனை​வி சவுமியா அன்​புமணி வெற்றி பெற்​றார். அதே​போல், செஞ்​சி​யில் அ.கணேஷ் குமார், ஜெயங்​கொண்​டத்​தில் க.வைத்​திலிங்​கம், விக்​கிர​வாண்​டி​யில் சி.சிவக்குமார் ஆகியோர் வெற்றி பெற்​றனர்.

இந்​நிலை​யில், பாமக சட்​டப்​பேரவை குழு தலை​வ​ராக சவுமியா அன்​புமணி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். சட்​டப்​பேரவை கட்​சி​யின் துணை தலை​வ​ராக செஞ்சி சட்​டப்பேரவை உறுப்​பினர் அ.கணேஷ்கு​மார், கொற​டா​வாக விக்​கிர​வாண்டி தொகுதி சட்​டப்​பேரவை உறுப்​பினர் ச.சிவக்​கு​மார் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT