தமிழகம்

செயல்பாட்டுத் திறனில் முக்கிய மேம்பாடு: நாட்டிலேயே முதலிடம் பிடித்தது தெற்கு ரயில்வே

செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வே கடந்த நிதி​யாண்​டில் (2025-26) செயல்​பாட்​டுத் திறனில் குறிப்​பிடத்​தக்க வளர்ச்​சி​யைப் பதிவு செய்​துள்​ளது. புதிய ரயில்​களின் அறி​முகம், நேர மேலாண்மை மற்​றும் பயணி​களுக்​கான கூடு​தல் வசதிகள் என அனைத்து பிரிவு​களி​லும் முதலிடம் பிடித்​துள்​ளது.

கடந்த நிதி​யாண்​டில் மட்​டும் 28 ஜோடி புதிய ரயில்​கள் மற்றும் 2 ஒரு​வழி சேவை​களை தெற்கு ரயில்வே அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

இதில் கே.எஸ்​.ஆர். பெங்​களூரு – எர்​ணாகுளம் வந்தே பாரத் விரைவு ரயில் மற்​றும் தென்​னிந்​தி​யாவை வடக்கு மற்​றும் கிழக்கு இந்​திய மாநிலங்​களு​டன் இணைக்​கும் 10 ஜோடி அம்​ரித் பாரத் விரைவு ரயில்​கள் அடங்​கும்.

மேலும் 12 ஜோடி மெயில், விரைவு ரயில்​களும், புறநகர் பயணி​களின் வசதிக்​காக 7 ஜோடி பாசஞ்​சர் மற்​றும் மெமு ரயில்​களும் பயன்​பாட்​டுக்கு வந்​துள்​ளன. கடந்த நிதி​யாண்​டில், ஒட்​டுமொத்த நேர மேலாண்​மை​யில் 93.22 சதவீதம் பெற்று சாதனை படைத்​துள்​ளது.

மெயில், விரைவு மற்​றும் புறநகர் ரயில்​கள் என அனைத்​தை​யும் உள்​ளடக்​கிய இந்த விகிதத்​தில், இந்​தி​யா​விலுள்ள அனைத்து ரயில்வே மண்​டலங்​களை​யும் விட தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்​துள்​ளது. இப்​பட்​டியலில் மேற்கு ரயில்வே 2-வது இடத்​தை​யும், வடமேற்கு ரயில்வே 3-வது இடத்​தை​யும் பிடித்​துள்​ளன.

அதே​போல, மெயில், விரைவு ரயில்​களை மட்​டும் கணக்​கில் கொண்​டால், தெற்கு ரயில்வே 91.3 சதவீதம் நேர மேலாண்​மை​யுடன் இந்​திய அளவில் 3-வது இடத்​தைப் பெற்​றுள்​ளது. இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT