சென்னை: கோடைகாலத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (14-ம் தேதி), வரும் 21, 28 ஆகிய தேதிகளில் காலை 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் சந்திரகாச்சியை சென்றடையும்.
மறுமார்க்கமாக, மேற்குவங்கம் சந்திரகாச்சியில் இருந்து நாளை (15-ம் தேதி), வரும் 22, 29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, விஜயவாடா வழியாக சந்திரகாச்சியை அடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.