சென்னை: பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதிகளை அறிவியல்பூர்வமாக தீர்மானிக்க வேண்டும் என ஈர நிலங்கள் ஆணையத்தின் உறுப்பினர் செயலரிடம் பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் சவுமியா அன்புமணி நேரில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஈரநிலங்கள் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ராகேஷ் குமார் ஜகேனியாவை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சவுமியா அன்புமணி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள தமிழ்நாடு மாநில ஈர நிலங்கள் ஆணைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தின் தாக்கப்பகுதிகளை அறிவியல்பூர்வமாக தீர்மானிக்க வேண்டும்; பள்ளிக்கரணை வடிநிலத்தில் உள்ள 65 நீர்நிலைகளையும் தாக்கப் பகுதியாக (Zone of Influence) அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். இது தொடர்பான மனுவையும் அவர் அளித்தார்.
இந்த மனுவின் நகல்கள் முதல்வர் விஜய், மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மாநில வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே.ராஜிவ், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.