உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

“தமிழகத்தை அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து திமுக நிச்சயம் மீட்கும்” - உதயநிதி ஸ்டாலின்

வெற்றி மயிலோன்

சென்னை: “இன்று சில பேர் சோஃபா வந்தவுடன் நம்மை விட்டு போயிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்குமான உறவை யார் வந்தாலும் பிரிக்க முடியாது. இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து, தமிழகத்தை திமுக நிச்சயம் மீட்கும்” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “ இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெருமக்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று நாட்டில் என்ன நடக்கிறது என எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்று சில பேர் சோஃபா வந்தவுடன் நம்மை விட்டு போயிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் அத்தனை பேரும் திமுகவோடு இருப்போம் என உறுதியோடு வந்துள்ளீர்கள்.

இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்குமான உறவை யார் வந்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளை பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றைக்கும் காவல் அரணாக நிச்சயம் இருக்கும். இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து, தமிழகத்தை திமுக நிச்சயம் மீட்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT