சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய தகவல்களை வெளியிடக் கோரி செம்பியத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.தேவராஜன்,சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், வி.எஸ்.பாபு உயிரிழந்ததாக வெளியான தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளதாக தேவராஜன் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் அவர் அனுப்பிய புகாரில், ‘‘வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்ட மறுநாள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியானது.
பின்னர் அவரது உடல் நிலை குறித்து முறையான அறி விப்புகள் வெளியாகவில்லை. வி.எஸ்.பாபுவின் ரத்த மாதிரிகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான வீடியோ பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும்.
அரசு மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார். மேலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.