பயன்பாடற்ற குவாரிகளைச் சுற்றி கம்பி வேலி: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

பயன்பாடற்ற குவாரிகளைச் சுற்றி கம்பி வேலி: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் டி.பிரபுசங்கர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பயன்பாடற்ற குவாரிகளில் சிலர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகமாகப் பதிவாகி வருகின்றன.

இதைத் தடுக்க, அரசு மற்றும் பட்டா நிலங்களில் உள்ள உரிமக்காலம் முடிந்த பயன்பாடற்ற குவாரிகள் அனைத்தையும் சுற்றி நிரந்தர கம்பிவேலி அமைக்க வேண்டும்.

இந்த பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். பட்டா நிலக் குவாரிகளில், முன்னாள் குத்தகைதாரர்கள் தங்கள் சொந்த செலவில் வேலி அமைத்துள்ளனரா என்பதை மாவட்ட அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

குவாரிகளைச் சுற்றி குறைந்தபட்சம் 1.5 மீட்டர் உயரத்தில், 2.5 மி.மீ. தடிமனுள்ள கால்வனைஸ்டு இரும்பு முள்கம்பிகளைக் கொண்டு, உறுதியான கான்கிரீட் அல்லது கல்தூண்களில் வேலி அமைத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

இதுகுறித்த மாவட்டவாரியான ஒருங்கிணைந்த அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயன்பாடற்ற குவாரிகளைச் சுற்றி கம்பி வேலி: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்

X