தமிழகம்

ரூ.1.23 கோடியில் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இயங்கும் 6 படைப்பகங்கள்: தனியார் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ​திரு.​வி.க.நகர் மண்​டலத்​தில் இயங்​கும் 6 படைப்​பகங்​களை ரூ.1.23 கோடி​யில் தனி​யார் மூலம் பராமரிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

புத்​தொழில் தொடங்​கு​வோர் குறைந்த கட்​ட​ணத்​தில் தங்​கள் அலு​வல​க​த்தை பயன்​படுத்​த​வும், போட்​டித் தேர்​வு​களுக்கு தயா​ராகும் மாணவர்​கள் குறைந்த கட்​ட​ணத்​தில் படிக்​கும் சூழலை ஏற்​படுத்​த​வும், தமிழக அரசு சார்​பில், வடசென்னை வளர்ச்சி திட்​டத்​தின் கீழ், ரூ.2.85 கோடி செல​வில் ‘முதல்​வர் படைப்​பகம்’ என்ற பகிர்ந்த பணி​யிட மையம், கடந்த 2024-ம் ஆண்​டு, அப்​போதைய முதல்​வரின் தொகு​தி​யான கொளத்​தூரில் அமைக்​கப்​பட்​டது.

அதனைத் தொடர்​து, சென்னை மாநகரில் பல்​வேறு பகு​தி​களில் முதல்​வர் படைப்​பகங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. திரு​விக நகர் மண்​டலத்​தில் மட்​டும் ஜவஹர் நகர், ஜெகந்​நாதன் தெரு, கன்​னி​காபுரம், ஓட்​டேரி, மங்​களபுரம், புளியந்​தோப்பு ஆகிய 6 இடங்​களில் முதல்​வர் படைப்​பகங்​கள் இயங்கி வரு​கின்​றன. இவற்றை இது​நாள் வரை மாநக​ராட்சி நிர்​வாகமே நேரடி​யாக பராமரித்து வந்​தன.

தவெக ஆட்சி அமைந்த பிறகு, 6 முதல்​வர் படைப்​பகங்​களின் பராமரிப்பு பணியை தனி​யாரிடம் வழங்க மாநக​ராட்சி முடிவு செய்​துள்​ளது. அதற்​காக, ரூ.2.23 கோடி​யில் டெண்​டர்​களை மாநக​ராட்சி கோரி​யுள்​ளது.

அந்த டெண்​டர் ஆவணத்​தில் முதல்​வர் என்ற சொல் நீக்​கப்​பட்டு படைப்​பகம் என்று மட்​டுமே இடம் பெற்​றுள்​ளந்​து. இதனால், பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக சர்ச்சை எழுந்​துள்​ளது.

தனி​யார்​ம​யம் இல்​லை

சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில், மாநக​ராட்சி மற்​றும் சிஎம்​சிஏ சார்​பில் 24 முதல்​வர் படைப்​பகங்​கள் கட்​டும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டு, அதில் 15 முதல்​வர் படைப்​பகங்​கள் மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளன. இதர 9 முதல்​வர் படைப்​பகங்​கள் கட்​டும் பணி நடை​பெற்று வரு​கிறது.

இந்த 15 முதல்​வர் படைப்​பகங்​களும், மாநக​ராட்​சி​யால் சிறப்​பாக பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதை சிறப்​பாக நடத்​து​வதற்​காக, இப்​படைப்​பகங்​களுக்​குத் தேவை​யான பாது​காவலர், தூய்​மைப் பணி​யாளர், வரவேற்​பாளர் உள்​ளிட்ட பணி​களுக்​குத் தேவை​யான பணி​யாளர்​களுக்​காக மட்​டுமே ஒப்​பந்​தம் கோரப்​பட்​டுள்​ளது. முதல்​வர் படைப்​பகங்​கள் தனி​யார் மயமாக்​கப்​பட​வில்​லை என தெரிவிக்கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT