தமிழகம்

அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசமாகச் செல்ல விருப்பம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சகோதரர் மனைவி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: வீடு புகுந்து தாக்​கியது தொடர்​பான வழக்​கில் தமிழக அமைச்​சர் மரிய வில்​சனுடன் சமரசமாகச் செல்ல விருப்​பம் இல்லை என உயர் நீதி​மன்​றத்​தில் அவரது சகோ​தரரின் மனைவி திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்ளார்.

தமிழக நிதி அமைச்​சர் மரிய வில்​சன் கடந்த 2022 ஆக.8-ம் தேதி சொத்​துப் பிரச்​சினை காரண​மாக புதுச்​சேரியில் உள்ள தனது அண்​ணன் மரிய குலோத், அண்ணி கெரோலினை வீடு புகுந்து தாக்​கிய​தாக புதுச்சேரி லாஸ்​பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் இந்த வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி மரிய வில்​சன் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இரு தரப்​பும் சமரச​மாக செல்​வ​தாக கூறியதை அடுத்து சமரசத் தீர்வு மையம் மூலம் தீர்வு காண உத்​தர​விட்​டது.

அதன்​படி, உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள சமரசத் தீர்வு மையத்​தில் சகோ​தரர்​கள் இடையே 4 முறை பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் தீர்வு ஏற்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், மரிய வில்சனின் மனுவை விசா​ரித்த உயர்நீதி​மன்ற நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், “மரிய வில்சனுக்கு எதி​ராக புகார் கொடுத்த அவரது அண்ணி கெரோலின் தனது நிலைப்​பாட்​டைத் தெரி​வி்க்​கும் வகை​யில் நேரில் ஆஜராக வேண்​டும்” என உத்​தர​விட்டார்.

அதன்​படி, நீதிபதி லட்​சுமி நாராயணன் முன்பு வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அதன் விவரம்: கெரோலின் மற்​றும் வழக்​கறிஞர்​கள் கிளாடியஸ் டேனியல், முகமது ரபீ: வீடு புகுந்து தாக்​கிய விவ​காரத்​தில் மரிய வில்​சனுடன் சமரச​மாகச் செல்ல விருப்​பம் இல்​லை.

மரிய வில்​சன் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ஹாஜா முகை​தீன் கிஸ்​தி: புகார்​தா​ரருக்கு ரூ.3 கோடிக்கு மேல் பணம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. பெரும்​பாலும் அனைத்து பிரச்​சினைக்​கும் தீர்வு காணப்​பட்டு விட்​டது.

கடைசி​யாக ஒரு​முறை மீண்​டும் சமரசத் தீர்வு மையத்​துக்கு அனுப்​பி​னால் மீதி இருக்​கும் அந்த ஒரு பிரச்​னைக்​கும் சுமுக தீர்வு காணப்​படும்.

நீதிப​தி: சமரச​மாகச் செல்ல விருப்​பம் இல்லை என்​று, புகார்​தா​ரரே ஆஜராகி கூறி​யுள்​ளார். எனவே, அவரை நிர்ப்​பந்​திக்க முடி​யாது.

நேரில் ஆஜராக விலக்கு

மரிய வில்​சன் தரப்​பு: புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் வழக்கு 21-ம் தேதி (இன்​று) விசா​ரணைக்கு வரு​கிறது. தமிழக சட்​டப்​பேரவை நடவடிக்​கை​யில் பங்​கேற்க வேண்​டி​யுள்​ள​தால், ஆஜராக விலக்கு தரவேண்​டும்.

இவ்​வாறு வாதம் நடந்​தது. இதையடுத்து, நேரில் ஆஜராக விலக்கு அளித்த நீதிபதி, மரிய வில்​சன் மனு மீதான விசா​ரணையை ஆக.28-க்கு தள்​ளிவைத்தார்.

SCROLL FOR NEXT