தமிழகம்

பாடகர் நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா: நாளை நடைபெறும் நிகழ்வில் உதயநிதி பங்கேற்பு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா நூற்​றாண்டு விழா நாகை​யில் நாளை (டிச.20) நடை​பெறுகிறது. இதில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்​கேற்​கிறார்.

இஸ்​லாமிய, திரா​விட இயக்​கப் பாடல்​கள் பாடியதன் மூலம் புகழ் பெற்​றவர் நாகூர் ஹனி​பா. தமிழக சட்​டப்​பேரவை மேலவை உறுப்​பின​ராக​வும், தமிழ்​நாடு வக்பு வாரி​யத் தலை​வ​ராக​வும் மக்​கள் பணி​யாற்றி உள்​ளார். இவர் 2015-ல் தனது 90-வது வயதில் உடல்​நலக்​குறை​வால் உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில், அவரது நூற்​றாண்டு விழாவை முன்​னிட்டு நாகை நாகூரில் அவரது வீடு அமைந்​துள்ள தைக்​கால் தெரு​வுக்கு ‘இசை முரசு நாகூர் ஹனிபா தெரு’ என்று பெயர் வைக்​கப்படும் என்​றும், ரூ.2 கோடி​யில் மேம்​படுத்​தப்பட உள்ள நாகூர் சில்​லடி கடற்​கரை​யில் அமைக்​கப்​படும் பூங்கா​வுக்கு நாகூர் ஹனிபா பெயர் வைக்​கப்​படும் என்​றும் தமிழக அரசு கடந்த ஆண்டு அறி​வித்​தது. அதன்​படி, அவரது வீடு உள்ள தெரு​வுக்கு நாகூர் ஹனிபா பெயர் சூட்​டப்​பட்​டது.

இந்​நிலை​யில், நாகூர் ஹனி​பா​வின் நூற்​றாண்டு விழா, நாகை​யில் உள்ள மீன்​வளப் பல்​கலைக்​கழகத்​தில் நாளை (டிச.20) நடை​பெறுகிறது. இதில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்​து​கொண்​டு, நாகூர் ஹனி​பா​வின் குடும்​பத்​தினரை கவுர​வித்​துப் பேசுகிறார். முன்​ன​தாக, நாகூர் சில்​லடி கடற்​கரை​யில் நாகூர் அனிபா பெயரில் அமைக்​கப்​பட்​டுள்ள பூங்​காவை துணை முதல்​வர் திறந்​து​வைக்​கிறார்.

SCROLL FOR NEXT