கோப்புப் படம்

 
தமிழகம்

தேர்தலில் வாக்களித்த சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பெண் கைது

செய்திப்பிரிவு

கும்பகோணம்: சிங்​கப்​பூர் குடி​யுரிமை பெற்ற பாப​நாசத்​தைச் சேர்ந்த பெண் ஒரு​வர், தேர்​தலில் வாக்​களித்த​தாக போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

தஞ்​சாவூர் பாப​நாசம் பண்​டார​வாடை​யைச் சேர்ந்​தவர் மும்​தாஜ்பேகம் (51). இவர், சிங்​கப்​பூர் குடி​யுரிமை பெற்​றவர். சொந்த ஊருக்கு வந்​திருந்த அவர் நேற்று முன்​தினம் மீண்​டும் சிங்​கப்​பூருக்​குச் செல்ல திருச்சி விமான நிலை​யத்​துக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது, அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில், மும்​தாஜ் பேகம் நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், சட்​ட​விரோத​மாக வாக்கு செலுத்​தி​யது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, விமான நிலைய குடியேற்​றப் பிரிவு அதி​காரி முகேஷ்​ராம் கவுதம், பாப​நாசம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில், மும்​தாஜ்பேகம் மீது வழக்​குப் பதிந்து நேற்று முன்​தினம் அவர் கைது செய்​யப்பட்டார்.

SCROLL FOR NEXT