அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படும் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள்: தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படும் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள்: தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி
Updated on
1 min read

மதுரை: தவெக ஆட்​சி​யில் அதி​முக, பாஜக ஆதர​வாளர்​களுக்கே அரசு வழக்​கறிஞர்​கள் பதவி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தவெக வழக்​கறிஞர்​கள் அதிருப்தி தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வை சேர்த்து அரசு தலைமை வழக்​கறிஞர், அரசு தலை​மைக் குற்​ற​வியல் வழக்​கறிஞர், கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​கள், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்​கறிஞர்​கள், கூடு​தல் அரசு வழக்​கறிஞர்​கள், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், உரிமை​யியல், குற்​ற​வியல் அரசு வழக்​கறிஞர்​கள் என 180 அரசு வழக்​கறிஞர் பதவி​கள் உள்ளன.

இப்​ப​தவி​களில் ஆளும் கட்​சி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர்​கள் நியமிப்​பது வழக்​கம். திமுக ஆட்​சி​யின்​போது அரசு வழக்​கறிஞர்​களாக இருந்​தோர் தவெக ஆட்​சிக்கு வந்​ததும் பதவி வில​கினர். இந்​நிலை​யில், தலைமை அரசு வழக்​கறிஞ​ராக விஜய் நாராயணன், அரசு தலை​மைக் குற்​ற​வியல் வழக்​கறிஞ​ராக ஜான் சத்​யன், கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​களாக பி.​வி.​பாலசுப்​பிரமணி​யம், டி.க​வுதமன் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் அதி​முக, பாஜக ஆதர​வாளர்​கள் ஆவர்.

இவர்​களில் விஜய் நாராயணன் அதி​முக ஆட்​சி​யில் 2017 முதல் 2021 வரை தலைமை அரசு வழக்​கறிஞ​ராக இருந்​தார். பாலசுப்​பிரமணி​யம், கவுதமன் ஆகியோ​ரும் அதி​முக ஆட்​சி​யில் கூடு​தல் அட்​வகேட் ஜெனரல்​களாக இருந்​தனர். அதி​முக ஆட்​சி​யில் அரசு வழக்​கறிஞர்​களாக இருந்​தவர்​களை, தவெக ஆட்​சி​யிலும் அரசு வழக்​கறிஞர்​களாக நியமித்​தது தவெக வழக்​கறிஞர்​களிடையே அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்ளது.

இதுகுறித்து தவெக வழக்​கறிஞர்​கள் கூறிய​தாவது: விஜய் கட்சி தொடங்கி 3 மாநாடு​கள் வரை பிரச்சினை இல்​லாமல் போனது. கரூர் மாநாட்​டில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்​தச் சம்​பவத்​தால் விஜய்யை அனை​வரும் கைவிட்​டனர். அப்​போது, விஜய்க்கு பக்​கபல​மாக இருந்து அவரைப் பாது​காத்​தது தவெக வழக்​கறிஞர் அணி​தான்.

கரூர் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் கருத்​துத் தெரி​வித்த 217 தவெக​வினர், திமுக ஆட்​சி​யில் குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டனர். 5,328 தவெக​வினர் கைது செய்​யப்​பட்​டனர். தவெக வழக்​கறிஞர் அணி தமிழகம் முழு​வதும் பயணம் செய்து கைதாகி​யிருந்த கட்​சி​யினர் ஜாமீனில் வர உதவியது.

இவ்​வாறு தவெக​வுக்​காகப் பணி​யாற்​றிய வழக்​கறிஞர்​களுக்கு உரிய பதவி​கள் வழங்​காமல், ஆட்​சிக்கு வந்​ததும் நீதித் துறையைச் சேர்ந்த சிலரின் பரிந்​துரையை ஏற்று அதி​முக, பாஜக ஆதர​வாளர்​களுக்கு பதவி வழங்​கு​வது நல்​லதல்ல. எனவே, அரசு வழக்​கறிஞர்​கள் நியமனத்​தில் தவெக தலை​வர் விஜய் தலை​யிட்​டு, கட்​சிக்​காக உழைத்த வழக்​கறிஞர்​களுக்கு உரிய பதவி​களை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்கள் கூறினர்.

அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படும் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள்: தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி
முதல்வர் விஜய் மீது பொறாமை இல்லை: ரஜினிகாந்த் பேசியது என்ன? - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in