தமிழகம்

மெரினா கடற்கரையில் மாயமான 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை

செய்திப்பிரிவு

சென்னை: ஆந்​திர மாநிலம், உப்​பரபலம், விழு​கொண்டல மண்​டலம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் பாலபத்​ராஜ் (28). இவர் தனது மனைவி மற்​றும் 2 வயது பெண் குழந்​தை​யுடன் சென்​னைக்கு வந்​துள்​ளார்.

இவர்​கள் சாய்​பாபா படம் கொண்ட சிறிய வாக​னம் மூலம் பகல் நேரத்​தில் சென்​னை​யில் உள்ள சாலைகளில் சுற்​றி​விட்​டு, இரவு நேரத்​தில் மெரினா கடற்​கரை​யில் தங்கி வந்​துள்​ளனர்.

மெரினா கடற்​கரை​யில் நேற்று முன்​தினம் மாலை குழந்தை விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது, திடீரென காணா​மல் போனது. அதிர்ச்​சி​யடைந்த பெற்​றோர், குழந்​தையை பல இடங்​களில் தேடி​யும் கிடைக்​க​வில்​லை. இதையடுத்து பாலபத்​ராஜ் உடனடி​யாக காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார்.

தகவலறிந்த மெரினா போலீ​ஸார் விரைந்து விசா​ரித்​தனர். மேலும், அங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த மயி​லாப்​பூர் சரக `சிங்​கப்​பெண்' சிறப்பு அதிரடிப்​படை போலீ​ஸார் மெரினா `புளூ பீச்' கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் கொடுத்​து, கடற்​கரை பகுதி முழு​வதும் தீவிர​மாக தேடினர்.

பொது​மக்​கள் கூட்​டத்​துக்​கிடையே அனைத்து இடங்​களி​லும் தேடி, இறு​தி​யில் கலங்​கரை விளக்​கம் பின்​புறம் உள்ள குழந்​தைகள் விளை​யாடும் பகு​தி​யில் ஒரு குழந்தை தனி​யாக நின்று அழுது​கொண்​டிருப்​ப​தைக் கண்​டனர்.

அங்கு சென்று பார்த்​த​போது, அது காணா​மல்​போன பாலபத்​ராஜின் 2 வயது பெண் குழந்தை என்​பது தெரிய​வந்​தது.

அந்த குழந்​தையை சிங்​கப்​பெண் போலீ​ஸார் மீட்டு மெரினா போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். மெரினா போலீ​ஸார் குழந்​தையை தந்தை பாலபத்​ராஜிடம் ஒப்​படைத்​தனர். முன்​ன​தாக நடத்​தப்​பட்ட வி​சா​ரணை​யில் அந்த குழந்தை இடம் மாறி சென்​ற​தால் தொலைந்​தது தெரிய​வந்​தது.

SCROLL FOR NEXT