இன்ஸ்​பெக்​டர் கவுதமன், எஸ்ஐ ராஜகோபால்

 
தமிழகம்

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு தவறான குறுஞ்செய்தி: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ பணி நீக்கம்

தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நடவடிக்கை

செய்திப்பிரிவு

மதுரை: காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்க வந்த பெண்​ணுக்கு தவறான குறுஞ்​செய்தி அனுப்​பிய இன்ஸ்​பெக்​டர், எஸ்ஐ ஆகிய இரு​வரை​யும் பணீ நீக்​கம் செய்து தென்​மண்​டல ஐஜி விஜயேந்​திர பிதாரி உத்​தர​விட்​டார்.

திண்​டுக்​கல் வத்​தலக்​குண்டு காவல் நிலைய இன்ஸ்​பெக்​டராக பணி​யாற்​றிய​வர் எம். கவுதமன். இவர், கடந்த 2025-ம் ஆண்டு நெல்லை மாவட்​டத்​தில் பணிபுரிந்​தார். அப்​போது, அவர் காவல் நிலை​யத்​துக்கு புகார் அளிக்க வந்த பெண் ஒரு​வரின் செல்​போன் எண்ணை பெற்று, அந்த பெண்​ணிடம் அடிக்​கடி செல்​போனில் பேசி கவுதமன் தொல்லை கொடுத்​துள்​ளார். இந்​நிலை​யில் ஒழுங்கு நட​வடிக்கை அதி​காரி என்ற முறை​யில், இன்ஸ்​பெக்​டர் கவுதமனை பணி​யி​லிருந்து நிரந்​தர​மாக நீக்​கம் செய்து தென்​மண்​டல ஐஜி விஜயேந்​திர பிதாரி நட​வடிக்கை எடுத்​துள்​ளார்.

பழநி அருகேயுள்ள கிராமத்​தைச் சேர்ந்த பெண் ஒரு​வர் அடிதடி பிரச்​சினை தொடர்​பாக, கடந்த மே மாதம் நெய்க்​காரப்​பட்டி தாலுகா காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கச் சென்​றார். அப்​போது அங்கு பணி​யில் இருந்த எஸ்ஐ ராஜகோபாலை சந்​தித்து, புகார் அளித்​தார். அதன் பேரில், எஸ்ஐ ராஜகோபால் விசா​ரணை நடத்​தினார். பின்​னர், அந்​தப் பெண்​ணின் வாட்ஸ் ஆப் எண்​ணுக்கு ராஜகோபால் ஆபாச​மாக குறுந்​தகவல் அனுப்​பியுள்​ளார்.

இதையடுத்து, மே 24-ம் தேதி அவர் ஆயுதப்​படைக்கு பணி​யிடம் மாற்​றப்​பட்​டார். அன்​றைய தினமே டிஐஜி உத்​தர​வின்​பேரில் ராஜகோபால் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். 5 மாதங்​களுக்கு மேலான நிலை​யில், நேற்று முன்​தினம் ராஜகோபாலை நிரந்​தர​மாக பணி நீக்​கம் செய்து தென் மண்​டல ஐஜி விஜயேந்​திர பிதாரி உத்​தர​விட்​டுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT