தமிழகம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பெண் செயலராக சாந்தி பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை செயல​ராக இருந்த சீனி​வாசன் ராஜி​னாமா செய்​ததையடுத்​து, தமிழக சட்​டப்​பேர​வை​யின் முதல் பெண் செயல​ராக ஆர்​.​சாந்தி நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

தமிழக சட்​டப்​பேரவை செயல​ராக கடந்த 2018-ல் நியமிக்​கப்​பட்ட கி.சீனி​வாசன், 2023-ல் ஓய்வு பெற்​றார். இதையடுத்து அவருக்கு அப்​போதைய திமுக அரசு 3 ஆண்​டு​கள் பணி நீட்​டிப்பு வழங்​கியது. அவரது பதவிக்​காலம் வரும் நவம்​பர் மாதம் முடிவடைகிறது.

இந்​நிலை​யில், சில தினங்​கள் முன்​ன​தாக அவர் தனது பதவியை திடீரென ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, சட்​டப்​பேர​வை​யின் புதிய செயல​ராக பணி மூப்பு அடிப்​படை​யில், சிறப்பு செயல​ராக இருந்த ஆர்​.​சாந்தி தேர்வு செய்​யப்​பட்​டார்.

அவரை சட்​டப்​பேரவை செயல​ராக நியமித்து ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் நேற்று உத்​தரவு பிறப்​பித்​தார். பேரவை செயல​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள சாந்தி வரும் ஜூலை மாதத்​துடன் ஓய்வு பெற உள்​ளார். எனவே, அவருக்கு ஓராண்டு பணி நீட்​டிப்​பும் வழங்கி ஆளுநர் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதைத் தொடர்ந்து பேர​வைச் செயலர் அறை​யில் சாந்தி நேற்று முறைப்​படி பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அவருக்​கு, பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிர​பாகர், பேரவை செயலக அதி​காரி​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

மதுரையைச் சேர்ந்த சாந்​தி, கடந்த 1992-ல் டிஎன்​பிஎஸ்சி தேர்வு மூலம், சட்​டப்​பேரவை செயல​கத்​தில் உதவி​யாள​ராக பணி​யில் சேர்ந்​தார். அதன்​பின், உதவி பிரிவு அலு​வலர், பிரிவு அலு​வலர், சார்பு செயலர், துணைச் செயலர், இணைச் செயலர், கூடு​தல் செயலர் என பதவி உயர்வு பெற்​று, சிறப்பு செயல​ராக பணி​யாற்றி வந்​தார்.

சிறப்பு செயலர் நிலை​யில், சமீபத்​தில் நடை​பெற்ற மாநிலங்​களவை தேர்​தலில் தேர்​தல் நடத்​தும் அதி​காரி​யாக பணி​யாற்​றி​னார். சட்​டப்​பேர​வை​யின் நிகழ்​வு​களில் அதி​கள​வில் பங்​கேற்ற அனுபவம் மிக்​கவர். தமிழக சட்​டப்​பேர​வை​யின் முதல் பெண் செயலர் சாந்தி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT