எட்டயபுரம் அருகே கோட்டூர் விலக்கு பகுதியில் லாரி மீது மோதிய விபத்தில் உருக்குலைந்த கார்.

 
தமிழகம்

எட்டயபுரம், ராமேசுவரம் அருகே இருவேறு விபத்துகளில் குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டி / ராமேசுவரம்: தூத்​துக்​குடி மாவட்​டம் எட்டயபுரம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் குழந்தை உள்பட 7 பேர் உயி​ரிழந்​தனர்.

சென்னை கொளத்​தூர் வெற்றி நகரைச் சேர்ந்​தவர் பாஸ்​கரன் (45). இவர், தனது மனைவி வனிதா (37), மகள் சந்​தியா (15), மகன் பிரதீப் குமார் (13), உறவினர் வசந்தி (40) ஆகியோ​ருடன், திருச்​செந்​தூர் கோயிலுக்கு காரில் கடந்த 11-ம் தேதி புறப்​பட்டு வந்​தார்.

          

காரை அதே பகு​தி​யைச்சேர்ந்த பழனி (45) ஓட்​டி​னார். இந்நிலையில் நேற்று காலை இவர்​கள் திருச்செந்​தூரில் இருந்து மீண்​டும் ஊருக்கு புறப்​பட்​டனர்.

தூத்​துக்​குடி - மதுரை தேசிய நெடுஞ்​சாலை​யில் எட்​டயபுரத்தை அடுத்​துள்ள கோட்​டூர் விலக்கு பகு​தி​யில் சென்ற போது, சாலையோரம் நிறுத்​தப்​பட்​டிருந்த லாரி​யின் பின்​புறம் கார் பலமாக மோதி​யது.

இதில், பாஸ்​கரன், வனி​தா, வசந்தி, ஓட்​டுநர் பழனி ஆகி யோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். உருக்​குலைந்த காருக்​குள் சிக்​கி​யிருந்த 4 பேரின் உடல்​களை​யும் எட்​டயபுரம் போலீ​ஸார் மீட்​டனர்.

படுகாயமடைந்த சந்தியா, பிரதீப் குமாரை மீட்டு எட்​டயபுரம் அரசு மருத்​துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல்​சிகிச்​சைக்​காக தூத்​துக்குடி அரசு மருத்துவக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

எட்டயபுரம் போலீ​ஸார் வழக்குபதிந்​து, லாரி ஓட்​டுநர் தென்​காசி சுப்​பிரமணி​யனிடம் விசா​ரித்தனர்​. மற்றொரு விபத்து இதேபோல் ராமேசுவரம் அருகே வேதாளை வேல​வன் குடி​யிருப்பைச் சேர்ந்​த கவுசல்யா.

தனது 4 வயது மகள் நவ்​யாக்கு உடல்நிலை சரியில்லாததால் மண்​டபத்​தி​லுள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு சென்றுவிட்டு ஸ்கூட்​டரில் திரும்பினார். ஸ்கூட்​டரை இவரது சகோ​தரர் கபில் (19) ஓட்​டி​னார்.

வழி​யில் எதிரே வந்த பைக், ஸ்கூட்​டர் மீது மோதியது. இதில் கபில், பைக்கை ஓட்டி வந்த குஞ்​சார்வலசையை சேர்ந்த ரித்​திஸ் (20) ஆகியோர் அதே இடத்​திலேயே இறந்​தனர்.

விபத்​தில் படு​காயமடைந்த குழந்தை நவ்​யாயும் பின்னர் உயி​ரிழந்​தது. கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மண்​டபம் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்.

SCROLL FOR NEXT