செங்கோட்டையன்

 
தமிழகம்

ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை உடனே வழங்க தனி வாரியம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஏழை, எளிய மக்​களுக்கு வீட்​டுமனைப் பட்​டாக்​களை உடனே வழங்​கு​வதற்​காக ஐஏஎஸ் அதி​காரி ஒரு​வரை ஆணை​ய​ராகக் கொண்​டு, தனி வாரி​யம் அமைக்​கப்பட உள்​ள​தாக அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

ஈரோடு மாவட்​டம் பெருந்​துறை​யில் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரிவித்த​தாவது: பொது​மக்​களிட​மிருந்து பெறப்​பட்ட மனுக்​களில் பெரும்​பாலானவை வீட்​டுமனைப் பட்டா தொடர்​பான கோரிக்​கைகள்​தான். ஏழை, எளிய மக்​களுக்கு வீட்​டுமனைப் பட்​டாக்​களை தாமதமின்றி உடனே வழங்​கும் நோக்​கில், முதல்​வர் உத்​தர​வுப்​படி ஐஏஎஸ் அதி​காரி ஒரு​வரை ஆணை​ய​ராகக் கொண்​டு, தனி வாரி​யம் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

1000 நில அளவையர் நியமனம்: மேலும், மாநிலம் முழு​வதும் நில அளவீட்டு பணி​களை விரைவுபடுத்​த​வும், நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் உள்ள பட்டா விண்​ணப்​பங்​களுக்கு தீர்வு காண​வும், வரு​வாய்த் துறை மூலம் தற்​காலிக அடிப்​படை​யில் 1,000 நில அளவையர்​கள் நியமிக்​கப்பட உள்​ளனர். பூஜ்ய மதிப்பு நிலங்​கள், நத்​தம் நிலப் பிரச்​சினை​கள் உள்​ளிட்ட சிக்​கல்​களுக்​கும் விரைந்து தீர்வு காணப்​படும்.சிப்​காட் வளாகத்​தில் ஆழ்​துளைக் கிணறுகள் அமைத்து மழைநீர் சேமிப்பு மூலம் நிலத்​தடி நீரின் தரத்தை மேம்​படுத்​தும் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்​

SCROLL FOR NEXT