தமிழகம்

ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான விசாரணைக்கு செந்தில் பாலாஜி, தம்பி அசோக்குமார் ஆஜராகவில்லை

செய்திப்பிரிவு

சென்னை: குதிரை பேரம் தொடர்​பான வழக்​கில் சம்​மன் அனுப்​பி​யும் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது தம்பி அசோக்​கு​மார் நேற்று ஆஜரா​காத​தால், அவர்​களை கைது செய்ய தமிழகம் மற்​றும் அண்டை மாநிலங்​களில் தனிப்​படை போலீ​ஸார் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் இறங்கி உள்​ளனர்.

சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை இல்​லாத் தீர்​மானம் கொண்டு வரும்​போது, அரசுக்கு எதி​ராக வாக்​களித்​தால் ரூ.35 கோடி தரு​வ​தாக திமுக​வினர் தன்​னிடம் பேரம் பேசி​ய​தாக ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா, சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் கொடுத்​தார். ஆட்சியைக் கவிழ்க்க கார்ப்​பரேட் நிறு​வனம் மூலம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்​கப்​பட்​ட​தாக​வும் அதிர்ச்சி தகவல்​கள் வெளி​யாகின.

இதுகுறித்து சென்னை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, யூ-டியூபர் திரு​நாவுக்​கரசு உட்பட 9 பேரை கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், ஆட்​சிக் கவிழ்ப்பு சதித் திட்​டத்​தின் பின்​னணி​யில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது தம்பி அசோக்​கு​மார் இருப்​பது அம்​பல​மான​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, இந்த வழக்​கில் அவர்​களும் முக்​கிய குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டனர். கரூர் மாவட்​டம் ராமேஸ்​வரப்​பட்​டி​யில் உள்ள அவர்​களது பூர்​வீக இல்​லத்​தில், தந்தை வேலுச்​சாமி​யிடம் போலீ​ஸார் சம்​மன் வழங்​கினர்.

திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் நேற்று (ஜூலை 6) காலை 10.30 மணிக்கு இரு​வரும் ஆஜராக வேண்​டும் என்று உத்​தர​விடப்​பட்​டிருந்​தது. ஆனால், அவர்​கள் இரு​வரும் நேற்று ஆஜராக​வில்​லை.

அவர்​களது செல்​போன்​கள் ‘சு​விட்ச் ஆஃப்’ செய்​யப்​பட்​டிருந்​தன. அவர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​களும் யாரும் வரவில்​லை. எந்த நேரத்திலும் கைது இதையடுத்​து, இரு​வருக்​கும் மீண்​டும் சம்​மன் அனுப்​பலாமா அல்​லது வேறு சட்ட நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளலாமா என்று போலீ​ஸார் தொடர்ந்து ஆலோ​சித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, இரு​வரும் வெளி​நாடு​களுக்​குச் செல்​வதை தடுக்க ஏற்​கெனவே அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் போலீ​ஸார் ‘லுக்​-அவுட்’ நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளனர். கடந்த 6 நாட்​களாக கரூரில் முகாமிட்​டுள்ள சென்னை தனிப்​படை போலீ​ஸார், தற்​போது தேடு​தல் வேட்​டையை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

சென்​னை, திருச்​சி, கோவை மட்​டுமின்​றி, அண்டை மாநிலங்​களான கேரளா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாட​கா, புதுச்​சேரி​யிலும் சந்​தேகப்​படும் இடங்​களில் தனிப்​படை​யினர் தேடி வரு​கின்​றனர்.

அரசி​யல் சதி, ஹவாலா பணப் பரி​மாற்​றம் மற்​றும் இதன் பின்​னணி​யில் உள்ள முக்​கிய பிர​முர்​கள் என பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது. சம்​மனை புறக்​கணித்​த​தால், இரு​வரும் எந்த நேரத்​தி​லும் கைதாகலாம் என்ற நிலை ஏற்​பட்​டுள்​ளது.

முன்​ஜாமீன் மனு விசா​ரணை வேறு நீதிப​திக்கு மாற்​றம்

குதிரை பேர புகார் தொடர்​பான வழக்​கில் முன்​ஜாமீன் கோரி அசோக்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். நீதிபதி சி.குமரப்​பன் முன்பு இந்த மனு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது காவல் துறை தரப்​பில், ‘`ஆட்​சி​யைக் கவிழ்க்க சதித் திட்​டம் தீட்​டப்​பட்​டுள்​ள​தாக இந்த வழக்​கில் மிக தீவிர​மான குற்​றச்​சாட்​டு​கள் உள்​ளன. எனவே, இந்த வழக்​கில் பதில் அளிக்க அவகாசம் தேவை.

மேலும், இதில் எம்​எல்ஏ செந்​தில் பாலாஜிக்​கும் தொடர்பு இருப்​ப​தால், எம்​.பி. எம்​எல்​ஏக்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் அமர்​வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்​டும்'’ என்று கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

அதை ஏற்​றுக்​கொண்ட நீதிப​தி, முன்​ஜாமீன் வழக்கை சம்​பந்​தப்​பட்ட நீதிபதி முன்பு பட்​டியலிட உத்​தர​விட்​டு, வி​சா​ரணையை நாளைக்கு (ஜூலை 8) தள்​ளி​வைத்​தார்​. அதன்​படி, எம்​.பி. எம்​எல்​ஏக்​கள் மீதான வழக்​கு​களை வி​சா​ரிக்​கும்​ நீதிப​தி ஜி.கே.இளந்​திரையன்​ முன்​பு இந்​த வழக்​கு நாளை வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

SCROLL FOR NEXT