சடகோபன்

 
தமிழகம்

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் காலமானார்

செய்திப்பிரிவு

சென்னை: ஸ்ரீரங்​கத்தை சேர்ந்த மூத்த ஆர்எஸ்எஸ் பிரச்​சா​ரகர் சடகோபன் காலமானார். ஸ்ரீரங்​கம் தெற்கு சித்​திரை வீதியை சேர்ந்​தவர் சடகோபன் நாராயணன்(64).

ஆர்​எஸ்எஸ் மூத்த பிரச்​சா​ரகர். வடதமிழக மாநில செயற்​குழு உறுப்​பின​ரான இவர், விஜயபாரதம் இதழின் ஆசி​ரியராகவும், பாஜக​வின் மாணவர் அமைப்​பான ஏபி​வி​பி​யின் தேசிய செய​லா​ளராகவும் இருந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், உடல்​நலக்​குறைவு காரண​மாக நேற்று காலமானார். அவரது உடல் சென்​னை​யில் ஆர்​எஸ்எஸ் தலை​மையக​மான சக்தி காரியாலயத்​தில் வைத்து இறுதி அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து நேற்று மாலை அவரது உடல் திருச்​சிக்கு எடுத்து வரப்​பட்டு ஸ்ரீரங்​கத்​தில் தெற்கு சித்​திரை வீதி​யில் உள்ள அவரது இல்​லத்​தில் இறுதி அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்டு உள்​ளது. இன்று (அக்.21) காலை இறுதி சடங்​கு​கள் நடை​பெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT