தமிழகம்

“50 ஆண்டு உழைப்புக்கு நீக்கம் தான் பரிசு” - செங்கோட்டையன் வேதனை

செய்திப்பிரிவு

கோவை: ஐம்பது ஆண்டுகால உழைப்பிற்கு அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பரிசு கொடுத்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்.எல்.ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன்பிறகும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

சென்னை செல்வதற்காக நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்த செங்கோட்டையனிடம், செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: எனது 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து, இயக்கத்திற்காக உழைத்துள்ளேன்.

அப்படிப்பட்ட என்னை கட்சியின் உறுப்பினராகக் கூட இருக்கக் கூடாது என்று முடிவு செய்து, நீக்கம் செய்து பரிசு கொடுத்துள்ளனர். இந்த மன வேதனை என்பது உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். இதற்கு மேல் எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை, என்றார்.

SCROLL FOR NEXT