செங்கோட்டையன்
கோவை: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மருத்துவக்கல்லூரி தொடங்க விண்ணப்பம் கொடுத்ததற்கு ஆதாரம் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே முதல்வர் விஜயின் நோக்கம்.பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி தொடங்க விண்ணப்பித்தது தொடர்பான மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அடுத்த செய்தியாளர் சந்திப்பில் அந்த ஆதாரத்தை நேரடியாகக் காட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.