டிடிவி தினகரன்

 
தமிழகம்

அதிமுக, அமமுகவில் இருந்தவர்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டார் செங்கோட்டையன்: டிடிவி தினகரன் விமர்சனம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: அ​தி​முக, அமமுக​வில் இருந்​தவர்​களை தவெகவில் சேர்த்து தற்​போது அவர்​களை செங்​கோட்​டையன் நடுரோட்​டில் நிறுத்​தி​யுள்​ளார் என அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பரந்​தூர் விமான நிலைய திட்​டத்தை கைவிட்​டதை வரவேற்​கிறேன். அதே நேரத்​தில் விமான நிலை​யத்தை விரி​வாக்​கம் செய்ய மாற்​றுத் திட்​டத்தை அரசு கொண்டு வர வேண்​டும். தன்னை வளர்த்து ஆளாக்​கிய இயக்​க​மான அதி​முக அழிந்து போகும் என அமைச்​சர் செங்​கோட்​டையன் கூறி​யிருப்​பது, அதி​முக மீது அவர் கொண்ட வன்​மத்​தைக் காட்​டு​கிறது.

அதி​முக, அமமுக​வில் இருந்​தவர்​களை எல்​லாம் அவர் அழைத்​துக் கொண்டு சென்று தவெக​வில் சேர்த்து தற்​போது நடுரோட்​டில் நிறுத்​தி​யுள்​ளார். தவெக​வில் செங்கோட்​டையனின் நிலை என்னவென்று எனக்குத் தெரி​யும். அதி​முக அழியாது, செங்​கோட்​டையன் வீழ்வார். அனைத்​துத் துறை​களி​லும் தமிழகம் பின்​னடைவை நோக்​கிச் செல்​கிறது. ஆதரவளித்த கட்​சிகளே தற்​போது தவெக​வுக்கு எதி​ராக பேசி வரு​கின்றன. இன்​னும் அவர்​கள் உணரும் காலம் வரும்.

SCROLL FOR NEXT