அமைச்சர் செங்கோட்டையன்  | கோப்புப் படம்

 
தமிழகம்

‘உரிமைத் தொகை உயர்வு குறித்து ‘முதல்வரே முடிவு எடுக்க வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு: மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்​கு​வது குறித்து முதல்​வரே முடிவு எடுக்க வேண்​டும் என வரு​வாய்த் துறை அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

ஈரோடு மாவட்​டம் கோபி​யில் கூட்​டுறவு பண்​டகசாலை அங்​காடி மூலம் ரூ.200 மதிப்​பிலான சிறப்பு மளி​கைத் தொகுப்பு விற்​பனையை அமைச்​சர் செங்​கோட்​டையன் நேற்று தொடங்கி வைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: முதல்​வர் விஜய், வரும் 3-ம் தேதி (நாளை) பெருந்​துறை​யில் நடை​பெற உள்ள நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில் பங்​கேற்​கிறார். அப்​போது ரூ.1,100 கோடி மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​களை வழங்க உள்​ளார். மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்​கு​வது குறித்து முதல்​வரே இறுதி முடிவு எடுக்க வேண்​டும்.

செங்​கல்​பட்​டில் தமிழக முதல்​வர் குறித்து அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி அவதூறான கருத்​துகளைத் தெரி​வித்​துள்​ளார். ஒவ்​வொரு​வரும் தங்​களுக்கு ஏற்​றவாறு கருத்​துகளைக் கூறு​வது வழக்​கம்​தான். அவர்​களது ஆட்​சிக் காலத்​தில் என்​னென்ன நடை​பெற்​றன என்​பதை எங்​களாலும் சுட்​டிக்​காட்ட முடியும். எதிர்க்​கட்சி என்ற முறை​யில் அரசுக்கு நல்ல ஆலோ​சனைகளை வழங்க வேண்​டுமே தவிர, பல்​வேறு கருத்​துகளைத் தெரி​விக்​கக் கூடாது.

நக​ராட்​சிகள் மற்​றும் பேரூராட்​சிகளுக்​கான பத​விக்​காலம் வரும் பிப்​ரவரி மாதம் முடிவடைவ​தால், அதற்​குப் பிறகுதான் உள்​ளாட்​சித் தேர்​தல் குறித்து இறுதி முடிவு எடுக்​கப்​படும்.

நீல​கிரி, கொடைக்​கானல் பகுதி​களில் பேரிடர் மேலாண்​மைத் துறை சார்​பில் கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்டு, ஆய்​வுப் பணிகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. ஆட்​சேபம் இல்​லாத புறம்​போக்கு நிலங்​களில் பட்டா வழங்​கு​வது தொடர்​பாக ஈரோடு மாவட்​டத்​தில் இது​வரை 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோரிடம் கணக்​கெடுப்​புப் பணிகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. முதல்​வர் உத்​தர​விட்​டதும் தகுதி​யுடைய அனைவருக்​கும் விரைவாக நிலப்​பட்டா வழங்​கப்​படும் என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT