சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மரியாதை செலுத்தினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலெல்லாம் முடிந்து ஆட்சிக்கு வந்தாச்சு. இனியும் பிரச்சார பாணியிலேயே முதல்வர் பேசிக் கொண்டிருக்காமல், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
காவிரியில் மேகேதாட்டு அணை கட்ட விடாமல் தடுப்பது, முல்லைப் பெரியாறு பிரச்சினை போன்ற மக்கள் நலன் சார்ந்த அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம்.
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் இடப் பங்கீடு மற்றும் இடங்களைக் கோருவது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் முடிவெடுக்கும்.
பிரவீன் சக்கரவர்த்திக்கு மாநிலங்களவை இடம் பரிந்துரைக்கப்படுவது குறித்து இதுவரை என்னிடம் பேசவில்லை. தலைமை கேட்டால் கருத்து கூறுவேன் என்றார்.