சென்னை: துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேற்று மாலை மண்ணடியில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்த அமைச்சர் சேகர்பாபு, சினோரா அசோக்குடன் நின்றிருந்த வழக்கறிஞரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர்பாபு, சினோரா அசோக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.