தமிழகம்

போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக வழக்கு: சேகர்பாபுவிடம் 2.30 மணி நேரம் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: போலீஸாரை தகாத வார்த்தைகளால் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் 2.30 மணி நேரம் விசா ரணை நடத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி மோசடி வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, விசாரணைக்காக அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தபோது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, காவல் ஆணையர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோலீஸாரு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில், சேகர்பாபு, திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் மீது வேப்பேரி போலீஸார் வழக்குப்பதிந்தனர். இதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சேகர் பாபுவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.

அதன்படி, நேற்று காலை 10.30 மணியளவில் வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜரானார். அவரிடம் உதவி ஆணையர் முன்னிலையில் போலீஸார் சுமார் 2.30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த சேகர்பாபு, செய்தியாளர் களிடம் கூறியதாவது: காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளரின் அணுகுமுறை சரியில்லாததால் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

அதனை ஏற்று விசார ணைக்கு ஆஜராகியுள்ளேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.

காவல்துறையினர் நேர்மையாக விசாரணை நடத்தினர். துன்புறுத்தவில்லை. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களைத் திசைதிருப்பும் நோக்கத்தில்தான் இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT