சீமான் | கோப்புப்படம்

 
தமிழகம்

‘ஜெய்பீம்’ படம் பார்த்து உருகியவருக்கு படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா? - ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

செய்திப்பிரிவு

ஜெய்​பீம் படம் பார்த்து உள்​ளம் உரு​கிய முதல்​வர் ஸ்டா​லினுக்கு தம்​முடைய ஆட்​சி​யில், தாம் நேரடி​யாக நிர்​வகிக்​கும் துறை​யின்​கீழ் நடை​பெறும் படு​கொலை​கள் உள்​ளத்தை உலுக்​க​வில்​லை​யா? என்று நாம் தமி​ழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிவகங்கை மாவட்​டம் மானாமதுரை​யில் காவல்​துறை​யால் பிடிக்​கப்​பட்டு விசா​ரணைக்கு அழைத்​துச்​செல்​லப்​பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்​திருப்​பது பெரும் அதிர்ச்சி அளிக்​கிறது. சட்​டம் - ஒழுங்கை சீர்​படுத்​து​வ​தில் ஆர்​வம் காட்​டாத காவல்​துறை, விசா​ரணை என்ற பெயரில் அப்​பாவி மக்​களை அடித்​துக்​கொல்​வ​தில் காட்​டு​வது கொடுமை​யாகும்.

திமுக ஆட்​சிப்​பொறுப்​பேற்ற கடந்த 5 ஆண்​டு​களில் 40-க்​கும் மேற்​பட்ட மரணங்​கள் காவல்​துறை விசா​ரணை​யின்​போது நடை​பெற்​ற​தாக தெரிய​வ​ரு​கிறது. ஜெய்​பீம் படம் பார்த்து உள்​ளம் உரு​கிய முதல்​வர் ஸ்டா​லினுக்கு தம்​முடைய ஆட்​சி​யில், தாம் நேரடி​யாக நிர்​வகிக்​கும் துறை​யின்​கீழ் நடை​பெறும் படு​கொலை​கள் உள்​ளத்தை உலுக்​க​வில்​லை​யா?

இளைஞர் ஆகாஷ் டெலிசனின் மரணத்​துக்கு காரண​மான காவலர்​கள் மீது கொலை வழக்கு பதிந்து உரிய விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT