அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும்: நயினார் நாகேந்திரன் உறுதி

திருச்​சி​யில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயி​னார் நாகேந்​திரன்.

திருச்​சி​யில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயி​னார் நாகேந்​திரன்.

Updated on
1 min read

“அ​தி​முக தனித்​துத் தான் ஆட்சி அமைக்​கும். எனவே, அதுபற்றி திமுக கவலைப்பட வேண்​டாம்” என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிரதமர் மோடி தலை​மை​யில் திருச்சி பஞ்​சப்​பூரில் அரசு விழா மற்​றும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பொதுக்​கூட்​டம் புதன் கிழமை நடை​பெற உள்​ளது. இதில், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் கலந்து கொள்​கின்​ற​னர். திருச்​சி​யில் நடக்​கும் விழா தமிழ்​நாட்​டின் ஆட்சி மாற்​றத்​துக்​கான விழா​வாக இருக்​கும். இதில் 7 லட்​சம் பேர் பங்​கேற்​பார்​கள். கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களு​டன் தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்​தையை விரை​வில் தொடங்​கு​வோம்.

மீண்​டும் திமுக வெல்​லும் என முதல்​வர் கூறுகி​றார். யார் வெற்றி பெறு​வார்​கள் என்​பதை தீர்​மானிக்​கப் போவது தமிழக மக்​கள் தான். 200 இடங்​களுக்கு மேல் நாங்​கள் உறு​தி​யாக வெற்றி பெறு​வோம். திமுக அரசு வாக்கு வங்கி அரசி​யலை மட்​டும் தான் செய்​கிறது.

மத்​திய அரசு, தமி​ழ​கத்​தில் 47 லட்​சம் விவ​சா​யிகளுக்கு ஆண்​டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்​கியது. இப்​போது 26 லட்​சம் விவ​சா​யிகள் தான் கணக்​கில் உள்​ளனர். மத்​திய அரசின் நிதி மக்​களுக்கு நேரடி​யாகச் சென்​றால், அவர்​கள் மத்​திய அரசுக்கு ஆதர​வாக இருப்​பார்​கள் என்ற எண்​ணத்​தில் திமுக அரசு, விவ​சா​யி​களின் எண்​ணிக்​கையை குறைத்து விட்​டது. பிரதமரின் நகர்ப்​புற வீட்​டு​வச​தித் திட்​டத்​தில் ரூ.15,704 கோடி​யில் 6 லட்​சம் வீடு​கள் தமி​ழ​கத்​துக்கு ஒதுக்​கப்​பட்​ட​தில் 3 லட்​சம் வீடு​களை முதல்​வர் இன்​னும் கட்​டித்​தர​வில்​லை.

திமுக ஆட்சி அமைந்​ததும் ஆயிரம் தடுப்​பணை​கள் கட்​டு​வோம் என்​ற​னர். ஆனால், இது​வரை கட்​ட​வில்​லை. அதி​முக தனித்​துத் தான் ஆட்சி அமைக்​கும். எனவே, அதுபற்றி திமுக கவலைப்பட வேண்​டாம். எங்​கள் கூட்​ட​ணி​யில் புதிய கட்​சிகள் வரலாம். விஜய் எங்​கள் கூட்​ட​ணிக்கு வரு​வது குறித்து கருத்​துக் கூற முடி​யாது. விஜய் தங்​களு​டைய கட்​சி​யின் கொள்கை என்ன என்​பதை தெளிவுபடுத்​தி​விட்​டு, கொள்கை எதிரி பாஜக என கூறட்​டும். வெறும் கொள்கை என்​கிற வார்த்​தையை மட்​டும் கூறு​வ​தால் அதற்கு அர்த்​தம் தெரிய​வில்​லை.

இந்​தி​யா​வில் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு என்​பது மிகப்​பெரிய பொய். நான் காஸ் டீலர், உங்​களுக்கு எங்கு சிலிண்​டர் வேண்​டுமோ நான் தரு​கிறேன். ஹோட்​டல்​களில் உணவு​களை குறைத்​ததற்​கும் காஸ் சிலிண்​டர் சப்​ளைக்​கும் தொடர்பு இல்​லை. ஹோட்​டல்​களில் உணவு இல்லை என எதிர்க்​கட்​சிக்​காரர்​கள் தான் எழுதி போட்​டிருப்​பார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>திருச்​சி​யில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயி​னார் நாகேந்​திரன்.</p></div>
விருப்ப மனு அளித்த 60 பேரிடம் விஜய் நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in