தமிழகம்

“இலவசங்களை அறிவிப்பது வளர்ச்சி அல்ல; கவர்ச்சி திட்டம்” - சீமான் கருத்து

புதுவை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்

செய்திப்பிரிவு

புதுச்​சேரி: புதுச்​சேரி நாம் தமிழர் கட்​சி​யின் அரசி​யல் மாநாடு மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வேட்​பாளர் அறி​முகக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டத்​தில் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கொடியை ஏற்றி வைத்து பேசி​ய​தாவது: இது​வரை புதுச்​சேரி, தமிழகத்​தில் இருக்​கின்ற அரசி​யல் கோட்​பாடு, நிலை​பாட்​டில் முற்​றி​லு​மாக எங்கள் கட்சி தத்​து​வ​மும், கோட்​பாடும் மாறுகிறது. இவர்​கள் ஊழல், லஞ்​சம். நாங்​கள் உண்மை, நேர்​மை.

          

நாங்​கள் மக்​களின் வாழ்க்​கை​யைப் பற்றி கவலைப்​படு​வோம். அவர்​கள் ஓட்டை பற்றியே கவலைபடு​வார்கள், நாங்​கள் நாட்டை பற்றி கவலைப்​படு​வோம்.

எல்​லா​வற்​றுக்​கும் இலவசம் அறிவிக்​கிறார்​கள். இலவசம் என்​பது வளர்ச்​சித் திட்​டம் அல்ல. அது வீழ்ச்சி திட்​டம். கவர்ச்சி திட்​டம். இலவசம் பெறவேண்​டிய ஏழ்​மை, வறுமை இல்​லாமல் எமது மக்​களை உயர்த்த வேண்​டும் என்பது எமது கடமை.

படித்​தவர், படிக்​காதவர் அனை​வருக்​கும் அரசு வேலை. படிக்​காதவரே இல்லை என்ற நிலையை உரு​வாக்​கு​வதே இலக்​கு. ஆணும், பெண்​ணும் சமம். இந்​திய கட்​சிகளின் மும்​மொழிக்​கொள்கை மோசடி கொள்​கை. இரு​மொழி கொள்கை ஏமாற்​றுக் கொள்கை. கொள்கை மொழி தமிழ். தமிழ் பயிற்று மொழி. ஆங்​கிலம் கட்​டாய பாடமொழி. பயன்​பாட்​டு, தொடர்பு மொழி. இது​தான் எங்கள் கோட்​பாடு.

இது​வரை இந்த மாநிலத்​தில் இருந்த அரசி​யல் அடித்​தளத்தை நாம் தமிழ் கட்​சி​யின் கோட்​பாடும், தத்​து​வ​மும் தகர்க்​கிறது. ஆள்​மாற்​றம், ஆட்சி மாற்​றம் தொடர்ந்து நடக்​கிறது. விடு​தலை பெற்ற இந்​தி​யா​வில் பல ஆண்​டு​களாக ஆள் மாற்​றம், ஆட்சி மாற்​றம் தொடர்​கிறது. ஆள் மாற்​றம், ஆட்சி மாற்​றம் அல்ல. அடிப்​படை அமைப்பு அரசி​யல் மாற்றமே எங்​கள்​ கோட்​பாடு. இவ்வாறு சீமான் பேசினார்.

SCROLL FOR NEXT