காரைக்குடியில் ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டிய சீமான்.

 
தமிழகம்

புரட்சிக்குத் தலைமை தாங்குவேன்! - காரைக்குடியில் சீமான் ஆவேசம்

செய்திப்பிரிவு

இலங்​கை, நேபாளம், வங்​கதேசம் போன்று எதிர்​காலத்​தில் தமி​ழ​கம் பெரிய புரட்​சி​யைச் சந்​திக்​கும். அதற்கு நான் தலைமை தாங்​கு​வேன் என்று காரைக்​குடி​யில் பிரச்​சா​ரம் செய்த சீமான் ஆவேச​மாகப் பேசி​னார்.

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி தொகு​தி​யில் நாதக வேட்​பாள​ராக கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் போட்​டி​யிடு​கி​றார். காரைக்​குடி புதிய பேருந்து நிலை​யம், ஐந்​து​விளக்​கு, பழைய பேருந்து நிலை​யம் உள்​ளிட்ட இடங்​களில் சீமான் பிரச்​சா​ரம் செய்​தார். நேற்று பிரச்​சா​ரத்​தின் இறு​தி​நாளில் தனது தொகு​திக்கு உட்​பட்ட செக்​காலை ரோடு என்ற இடத்​தில் பிரச்​சா​ரத்தை அவர் நிறைவு செய்​தார்.

பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் சீமான் பேசி​ய​தாவது: மக்​களில் 95 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர வர்க்​கத்​தினர். செல்​வந்​தர்​கள் ஐந்து சதவீதம்​தான் உள்​ளனர். செல்​வந்​தர்​கள்​தான் இன்​றைய நிலை​யில் பணத்தை வாரி இறைத்து ஆட்​சி​யைப் பிடிக்​கி​றார்​கள். ஐந்து சதவீதமே உள்ள செல்​வந்​தர்​களே ஆட்சி அமைக்க முடி​யும் என்ற நிலையை மாற்ற வேண்​டும். செல்​வந்​தர்​கள், முதலா​ளி​கள் மட்​டுமே அதி​காரத்​துக்கு வர முடி​யும் என்​றால் அது ஜனநாயகம் இல்​லை. ஓட்​டுக்கு நோட்​டு; அது நாட்​டுக்கு வேட்​டு.

தேர்​தல் நேரத்​தில் மட்​டும் அதி​முக, திமுக​வுக்கு மக்​கள் மேல் பாசம் வரு​கிறது. இரு கட்​சிகளும் போட்​டி​போட்டு இலவசங்​களை அறி​வித்​துள்​ளன. பெண்​களைக் குறி வைத்து திமுக, அதி​முக ரூ.2,000 பணம் தரு​வோம் என்று அறி​வித்​தால், என் தம்பி விஜய் ரூ.2,500 தரு​வோம் என்று அறிவிக்​கி​றார். விஜய் தனது மனை​விக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 கொடுப்​பா​ரா? ரூ.8,000 கூப்​பன் கனி​மொழி, துர்கா ஸ்டானுக்கு கொடுக்​கப்​படு​மா?

இலவசத்​துக்​கான பணத்தை எங்​கிருந்து எடுத்​துக் கொடுப்​பீர்​கள். நாட்​டைத்​தான் அடமானம் வைக்க வேண்​டும். தமி​ழ​கத்​தில் வேலை இல்​லை; உழைப்பு இல்​லை; வரு​வாய் இல்​லை; ஆனால், இலவசம் மட்​டும் இருக்​கிறது. இலவசங்​களால் பொருளா​தா​ரம் சிதைந்து நாடு சீரழிந்து போகும். மேலும் பெரும் கலவரத்​தைச் சந்​திக்​கும் சூழ்​நிலை ஏற்​படும்.

இலங்​கை, நேபாளம், வங்​கதேசம் போன்று எதிர்​காலத்​தில் தமி​ழ​கம் பெரிய புரட்​சி​யைச் சந்​திக்​கும். அதற்கு நான் தலைமை தாங்​கு​வேன். குடும்ப அட்​டைக்கு ரூ.2,000 கொடுத்​து​விட்​டு, ரூ.2 லட்​சம் கடனை நம் மீது திணிக்​கின்​ற​னர். நாங்​கள் மக்​கள் நலனுக்​காக களத்​தில் நிற்​கி​றோம். எங்​களுக்கு வாக்​களிப்​போர் வாக்​காளர்​கள் அல்ல; புத்​தம் புதிய அரசி​யலைக் கண்ட புரட்​சி​யாளர்​கள். உங்​களை ஏமாற்ற வேண்​டும் எண்​ணம் எங்​களுக்கு இல்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

இதற்​கிடையே, சீமான் நேற்று வெளி​யிட்ட வீடியோ பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இங்கு சாதி பேசி, மதம் பேசி, பணம் கொடுத்து அரசி​யல் செய்ய நாம் வரவில்​லை. இங்கு ஊழல், லஞ்​சத்​துக்​கும், உண்​மை, நேர்​மைக்​கும் தான் போட்​டி. இந்த சரித்​திரத்தை மாற்றி எழுத வேண்​டும் என்று வந்​திருக்​கி​றோம். வரலாற்​றில் மாபெரும் புரட்​சியை ஏற்​படுத்த வேண்​டும் என்று வந்​திருக்​கி​றோம். இது நம் பெரிய கனவு. இதை செய்ய நினைக்​கி​றோம். பெண்​களுக்​கான சரி​பாதி உரிமை, எல்லா சமூகத்​தினரும் புறக்​கணிக்​கப்​ப​டா​மல் அங்​கீகரிக்​கப்பட வேண்​டும்.

மாற்​றம் வரவேண்​டும் என்​றால் அது நம் கையில் தான் உள்​ளது. நமக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்​கிறது. எப்​படி பார்த்​தா​லும் வெற்​றிக்கு ஒரே வழி உழைக்க வேண்​டும். ஒரு நாள் நாம் வெல்​வோம். வரலாறு வழி​காட்​டி​யாக இருக்​கும். நமக்கு ஆலோ​சகர் என்று கூட யாரும் இல்​லை. நான் உங்​கள் உழைப்​புக்கு பொருளா​தா​ரத்​தில் வலிமைப்​படுத்த முடி​யாமல் இருந்​திருக்​கலாம், ஆனால் மனித ஆற்​றலை தாண்டி உழைத்​திருக்​கிறேன். இயன்​றதை கொடுத்​திருக்​கிறேன். நம்​பிக்​கையோடு களத்​தில் இருங்​கள். உறு​தி​யாக நாம் வெல்​வோம்.இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT