சீமான்

 
தமிழகம்

நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் இன்றுமுதல் தீவிர பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யில் காலி​யாக உள்ள தாராபுரம், மது​ராந்​தகம் ஆகிய தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் அக்​டோபர் 6-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்த​தேர்​தலில் நாம் தமிழர் கட்சி சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களை ஆதரித்​து, அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்பாளர் சீமான் தனது பிரச்​சார பயணத்தை இன்று தொடங்​கு​கிறார். தாராபுரம் தொகுதி நாதக வேட்​பாளர் மு.​கார்த்​தி​காவை ஆதரித்​து, தாராபுரம் காவல் நிலை​யம் அரு​கில் இன்று மாலை 5 மணிக்கு நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் அவர் உரை​யாற்​றுகிறார்.

தொடர்ந்​து, செப்​.22 மற்​றும் 23-ம் தேதி​களில் தாராபுரம் தொகு​தி​யிலும், செப். 26, 27, 30 மற்​றும் அக்​.1-ம் தேதி​களில் மது​ராந்​தகம் தொகு​தி​யிலும் அவர் வாக​னப் பரப்​புரை மற்​றும் பொதுக்​கூட்​டங்​கள் வாயி​லாக வாக்கு சேகரிக்​கிறார். இறு​திக்​கட்​ட​மாக அக். 3 மற்​றும் 4-ம் தேதி​களில் மீண்​டும் தாராபுரம் தொகு​தி​யில் சூறாவளிப் பயணம் மேற்​கொண்டு தீவிர வாக்கு சேகரிப்​பில்​ ஈடு​பட திட்டமிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT