தமிழகம்

“மதுபானம் விற்ற பணத்தில் அரசு இயங்குவது வெட்கக்கேடு” - சீமான் சீற்றம்

செய்திப்பிரிவு

மது​பானம் விற்ற பணத்​தில் அரசு இயங்​கு​வது வெட்​கக்​கேடு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசி​னார்.

தேனி மாவட்​டம் ஆண்​டிபட்​டி​யில் சீமான் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: திமுக​வும் அதி​முக​வும் மாறி மாறி இங்கு ஆட்சி செய்​கின்​றன. ஆனாலும், டாஸ்​மாக் மூடப்​பட்​ட​தா? கொலை கொள்ளை குறைந்​துள்​ள​தா? ஆண்​டிபட்​டி​யில் திமுக மற்​றும் அதி​முக சார்​பில் போட்​டி​யிடு​பவர்​கள் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த அண்​ணன், தம்​பிகள். கடந்த முறை அண்​ணனின் வெற்​றிக்​குத் தம்பி உதவி​னார். இம்​முறை தம்​பிக்கு அண்​ணன் உதவு​கிறார்.

          

இது​தான் ஜனநாயக​மா? - தொகு​தி​யில் ரூ. 30 கோடி செல​வழிப்​பவர்​கள் மக்​களுக்கு எப்​படி நன்மை செய்​வார்​கள்? செல​வழித்த தொகையை பல மடங்கு திரும்​பப் பெறவே முயற்சி செய்​வார்​கள். மக்​களுக்​குப் பிரச்​சினை தந்​தவர்​கள் ஒரு பக்​கம், பிரச்​சினையைத் தீர்ப்​பவர்​களான நாங்​கள் ஒரு பக்​கம். எங்​கள் இரு​வருக்​கும் இடையே​தான் போட்​டி.உங்​கள் வீட்​டில் திருடு​வதற்கு முன்பு முன்​பணம் வழங்​கு​வது போல்​தான் வாக்​குக்​குப் பணம் அளிப்​பது. மலை இருந்​தால்​தான் மழை கிடைக்​கும். தேனி மாவட்​டத்​தில் உள்ள பல மலைகள் குவாரி​யின் பிடி​யில் சிக்கி சின்​னாபின்​ன​மாகி வரு​கின்​றன.

பணம் இருந்​தால்​தான் தேர்​தலில் போட்​டி​யிட முடி​யும் என்​றால் அன்​றைக்கு கக்​கன், காம​ராஜர் போன்ற தலை​வர்​கள் உரு​வாகி இருக்க முடி​யாது. டாஸ்​மாக் வரு​மானத்​தில் அரசு நடக்​கிறது. மது​பானம் விற்ற பணத்​தில் அரசு இயங்​கு​வது வெட்​கக்​ கேடு. இயற்கை அன்​னை​யின் ரத்த நாளம்​தான் ஆறுகள். ஆனால் வைகை ஆறு இன்​றைக்கு கழி​வுநீர் ஓடும் பகு​தி​யாக மாறி விட்​டது. நான் வெற்றி பெற்​றால் இலவசத்​துக்​காக உங்​களை கையேந்த விட​மாட்​டேன். இவ்​வாறு அவர் பேசி​னார்.

அவமானம் இல்லை: இதற்​கிடையே சீமான் நேற்று வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில், ‘துண்​டறிக்கை விநி​யோகம், வாக்கு சேகரிப்​பில் ஈடு​படு​வோருக்கு உணவு என அடிப்​படை தேவை​களுக்கு நிதி தேவைப்​படு​கிறது. இதற்​காக மக்​களிடம் இருந்து திரள்​ நிதி பெறுகிறோம். இதை விமர்​சிக்​கிற கூட்​ட​மும் இருக்​கிறது. திருட்​டு நி​தியை விட திரள்​ நிதி எவ்​வளவோ மேன்​மை​யானது. என் மக்​களிடம் கையேந்​து​வ​தில்​ எனக்​கு எந்​த அவமான​மும்​ இல்​லை’ என்​று கூறியுள்​ளார்.

SCROLL FOR NEXT