தமிழகம்

சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை

செய்திப்பிரிவு

சென்னை: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் - கயல்​விழி தம்​ப​தி​யினருக்கு 2-வ​தாக பெண் குழந்தை பிறந்​துள்​ளது.

தமிழ் சினி​மா​வில் இயக்​குந​ராக அறி​முக​மாகி பின்​னர் அரசி​யலுக்கு வந்​தவர் சீமான். மறைந்த முன்​னாள் சட்​டப்​பேரவை தலை​வர் காளி​முத்​து​வின் மகள் கயல்​விழிக்​கும், சீமானுக்​கும் கடந்த 2013-ம் ஆண்டு திரு​மணம் நடை​பெற்​றது.

இந்த தம்​ப​தி​யினருக்கு திரு​மண​மாகி 5 ஆண்​டு​கள் கழித்​து, 2019 ஜனவரி​யில் ஆண் குழந்தை பிறந்​தது. மாவீரன் பிர​பாகரன் என அக்​குழந்​தைக்கு பெயரிட்​டனர்.

இந்நிலையில்,தற்​போது மீண்​டும் 7 ஆண்டு இடை வெளிக்கு பிறகு, சீமான் - கயல்​விழி தம்​ப​தி​யினருக்கு நேற்று 2-வ​தாக பெண் குழந்தை பிறந்​துள்​ளது. தாயும், குழந்​தை​யும் ஆரோக்​கி​யத்​துடன் நலமாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்தனர்.

SCROLL FOR NEXT