சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் தங்கள் கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்களை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண் நேற்று முன்தினம் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தபோது, திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு நேற்று பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்கவரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.