தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் மதுரை ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் மீதான நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை கோரிய மனுவை 2 நீதிப​தி​கள் அமர்வு தள்​ளு​படி செய்த நிலை​யில், நீதி​மன்ற அவம​திப்பு மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் நேற்று மாலை விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, கோயில் செயல் அலு​வலர், காவல் ஆணை​யர், மாவட்ட ஆட்​சி​யர் ஆகியோர் ஆஜராக வேண்​டும் எனவும், நேரில் இல்​லா​விட்​டாலும் காணொலி வாயி​லாக உடனடி​யாக ஆஜராக வேண்​டும் எனவும், காவல் ஆணை​யர் சீருடை​யில் இல்​லா​விட்​டாலும் பரவா​யில்​லை, கண்​டிப்​பாக ஆஜராக வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டார்.

அரசுத் தரப்​பில் "அதி​காரி​கள் 5 நிமிடங்​களில் ஆஜராக வேண்​டும் என்​றால் எப்​படி?" என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு நீதிப​தி, "5.30 மணிக்​குள் ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் காணொலி வாயி​லாக ஆஜராகா​விட்​டால் கடும் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்" என்​றார். பின்​னர் காவல் ஆணை​யர் ஜெ.லோக​நாதன் காணொலி வாயி​லாக ஆஜரா​னார்.

அவரிடம் நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த நடவடிக்கை எடுத்​தீர்​களா, 144 தடை உத்​தர​வைப் பிறப்​பிக்க ஆட்​சி​யருக்கு எப்​போது பரிந்​துரைக்​கப்​பட்​டது என்​றெல்​லாம் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு காவல் ஆணை​யர் பதில் அளித்​தார்.

பின்​னர் நீதிபதி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்​காக மனு​தா​ரர், அவரது வழக்​கறிஞர்​கள் ஆகியோர் சிஐஎஸ்​எப் பாது​காப்​புடன் மலைக்​குச் செல்ல முயன்​ற​போது காவல் ஆணை​யர் தடுத்​துள்​ளார். 144 தடை உத்​தரவு அமலில் இருப்​ப​தால், மேலே செல்ல அனு​ம​திக்க இயலாது என்று கூறி​யுள்​ளார்.

அதாவது, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற இயலாது என்று தெரி​வித்​துளளார். இதனால் தீபம் ஏற்ற இயல​வில்​லை. காவல் ஆணை​யர் போது​மான பாது​காப்பு வழங்​கி​யிருந்​தால், பிரச்​சினை பெரி​தாகி​யிருக்​காது. ஆணை​யர் நீதி​மன்​றத்​தை​விட, ஆட்​சி​யர் பெரிய​வர் என்று எண்​ணி​யுள்​ளார். ஆட்​சி​யர் பிறப்​பித்த உத்​தர​வால், நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்த இயல​வில்லை என்று விளக்​கம் அளித்​துள்​ளார். மாவட்ட ஆட்​சி​யர் பிறப்​பித்த 144 தடை உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

இன்று (டிச. 4) சர்​வாலய தீபத்திரு​நாள் என்​ப​தால் இன்​றும் கார்த்​திகை தீபம் ஏற்​றலாம். நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற காவல் ஆணை​யர் முழு பாது​காப்பு வழங்க வேண்​டும். மனு​தா​ரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த உத்​தரவை மீறி​னால் கடும் விளைவு​கள் ஏற்​படும்​. இவ்​வாறு நீதிப​தி உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT