தமிழகம்

காங்கிரஸில் சேர்ந்து ஒரே வாரத்தில் ஜி.கே.மணியின் மகனுக்கு சீட் கிடைத்த ரகசியம்!

செய்திப்பிரிவு

கடந்த மாதம் 28-ம் தேதி, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் டெல்லி சென்று காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்​தார். இதனால், அதிர்ச்சி அடைந்த ராம​தாஸ், தமிழ்க்​குமரனை பாமக-​வில் இருந்து நீக்​கு​வ​தாக கடந்த 29-ம் தேதி அறி​வித்​தார்.

காங்​கிரஸ் கட்​சி​யில் தமிழ்க்​குமரன் இணைந்த போதே, அவருக்கு பென்​னாகரம் தொகுதி ஒதுக்​கப்​படலாம் என்ற தகவல் வெளி​யானது. அதனை உறு​திப்​படுத்​தும் வித​மாக, நேற்று வெளி​யான காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் பட்​டியலில் தமிழ்க்​குமரனுக்கு பென்​னாகரம் தொகுதி ஒதுக்​கப்​பட்​டது. கட்​சி​யில் இணைந்த ஒரே வாரத்​துக்​குள் தமிழ்க்​குமரனுக்கு தொகுதி ஒதுக்​கீடு செய்​தது, காங்​கிரஸ் கட்​சி​யில் பெரும் விவாதப்​பொருளாகி​யுள்​ளது.

          

ராம​தாஸ் ஆதர​வாள​ராக​வும், தற்​போது பென்​னாகரம் எம்​எல்​ஏ-​வாக​வும் இருக்​கும் ஜி.கே.மணி, ராம​தாஸே சொன்​னாலும், இந்த முறை பென்​னாகரம் தொகு​தி​யில் மகனுக்கு எதி​ராக போட்​டி​யிடப் போவ​தில்லை என்ற முடிவை எடுத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அதேசம​யம், தமிழ்க்​ குமரனை காங்​கிரஸில் இணைத்து பென்​னாகரம் தொகுதி வேட்​பாள​ராக அறிவிக்கச் செய்​த​தில் திமுக-​வின் பங்கு அதி​கம் எனவும் அதன் பின்​னணி​யில் ஜி.கே.மணி இருந்​த​தாக​வும் சொல்​லப்​படு​கிறது.

இதுதொடர்​பாக பாமக தரப்​பில் நம்​மிடம் பேசி​ய​வர்​கள், “பாமக அன்​புமணி​யின் கட்​டுப்​பாட்​டில் சென்​று ​விட்​டது. இனிமேல், ராம​தாஸ் கூட இருந்​தால் ஒன்​றும் நடக்​காது என்​பது ஜி.கே.மணிக்கு தெரி​யும். ஏற்​கென​வே, ஜி.கே.மணி திமுக-வுடன் நல்ல நட்​புற​வில் உள்​ளார்.

தனது மகன் தமிழ்க்​குமரனின் அரசி​யல் எதிர்​காலத்தை கரு​தி, திமுக மூல​மாக காங்​கிரஸில் தனது மகனை சேர்த்து தனது பென்​னாகரம் தொகுதி சீட்​டையே வாங்​கி​விட்​டார். திரைப்பட தயா​ரிப்​பாளர் சங்க தலை​வ​ராக தமிழ்க்​குமரன் இருப்​ப​தால், அந்த லைனில் இருக்​கும் திமுக-​வினரும் தமிழ்க்​குமரனுக்கு சீட் கிடைக்க உதவி செய்​துள்​ளனர்.

பென்​னாகரம் தொகு​தி​யில் மகனை எதிர்த்து ஜி.கே.மணி போட்​டி​யிடப்​போவ​தில்​லை. ராம​தாஸும் பென்​னாகரம் தொகு​திக்கு வேட்​பாளரை அறிவிக்க வாய்​ப்பு இல்​லை” என்​றனர்​.

SCROLL FOR NEXT