சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி, சென்​னை​யில் தொடர்ந்து 3-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்ட போது கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு மற்​றொரு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்​கையை இது​வரை ஏற்​க​வில்​லை. இந்​நிலை​யில், சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்கையை முன்​வைத்​து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அதைத் தொடர்ந்​து, 3-வது நாளாக சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு நேற்று போராட்​டம் நடத்​தினர். நுழைவு வாயி​லில் அமர்ந்து ஏராள​மான ஆசிரியர்கள் தங்​கள் கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கோஷங்​களை எழுப்​பினர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, போலீ​ஸார், போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை கைது செய்​தனர். அப்​போது சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்​தனர். அவர்​கள், அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டனர். கைது செய்​யப்​பட்ட ஆசிரியர்கள், சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் உள்ள 10 திருமண மண்​டபங்​களில் அடைத்து வைக்​கப்​பட்டு மாலை விடுவிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், தங்​கள் கோரிக்​கையை வலி​யுறுத்​தி, போ​ராட்​டம் இன்​றும் (29-ம் தேதி) தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள்​ அறி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT