கோப்புப் படம்
சென்னை: ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஏப்ரல் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சென்னை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று (ஏப்ரல் 15) நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் பெரும்பாலான ஆசிரியர்களும், ஆசிரியரல்லாத பணியாளர்களும் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் கூறியுள்ளார்.