கோப்புப் படம்

 
தமிழகம்

கோடை வெயிலில் திறந்தவெளியில் செல்லக் கூடாது: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: கோடை வெப்​பத்​தின் தாக்​கத்​தில் இருந்து தற்​காத்​துக் கொள்ள வேண்​டுமென மாணவர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக் கல்​வித்​துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்:

அனைத்து வித​மான பள்​ளி​களில் பணிபுரி​யும் ஆசிரியர்​கள், பணி​யாளர்​கள் மற்​றும் மாணவர்​களும் இந்த கோடை வெப்​பத்​தின் தாக்​கத்​தில் இருந்து தங்​களை பாது​காத்து கொள்ள​வும் உடல்​நலனை பாது​காத்​துக் கொள்​வதும் அவசி​ய​மாகும். அதற்​கான சில அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதிக வெயில் உள்ள நேரங்​களில் குறிப்​பாக மதி​யம் 12 முதல் 3 மணி வரை திறந்​தவெளி​யில் செல்​வதை தவிர்க்க வேண்​டும். தண்​ணீர் தேவை​யான அளவு பரு​கு​வதற்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்தவேண்​டும். ஒவ்​வொரு பாட​வேளை தொடக்​கத்​தின்போதும் மாணவர்​கள் நீர் அருந்த வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும்.

ஓஆர்​எஸ் மற்​றும் வீட்​டில் தயார் செய்த எலுமிச்சை சாறு, நீர்​மோர், லஸ்​ஸி, பழச்​சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பரு​கலாம். பள்​ளி​யில் தேவை​யான ஓஆர்​எஸ் பாக்​கெட்​கள் மற்​றும் முதலுதவி பெட்​டகத்​தினை தயார் நிலை​யில் வைக்​கவேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT