தமிழகம்

கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தனி​யார் பள்​ளி​கள் கல்விக் கட்டண விவரங்​களை தகவல் பலகை​யில் வெளிப்​படை​யாக காட்​சிப்​படுத்த வேண்​டும் என்று தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநர் சுகன்யா உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யின் கீழ் சுமார் 13,000 தனியார் பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த பள்​ளி​களுக்​கான கட்​ட​ணங்​களை தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் கல்விக் கட்டண நிர்​ணயக் குழு தீர்​மானம் செய்​து​வரு​கிறது.

எனினும், பல்​வேறு தனி​யார் பள்​ளி​கள் நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட பெற்​றோர்​களிடம் கூடு​தலாக வசூலிப்​ப​தாக தொடர் புகார்​கள் எழுந்​தன.

இந்​நிலை​யில் தமிழ்​நாடு மாநில தகவல் ஆணை​யர் இளம்​பரிதி கடந்த வாரம் வெளி​யிட்ட அறி​விப்​பில், “அனைத்து தனி​யார் பள்​ளி​களும் கல்விக் கட்​ட​ணம் குறித்த விவரங்​களை தகவல் பலகை​யில் வெளி​யிட வேண்​டும்.

அதற்​கான அறிக்​கையை தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநரகம் ஜூன் 16-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்​”என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து அனைத்து தனி​யார் பள்​ளி​களும் நிர்​ண​யிக்​கப்​பட்ட கல்விக் கட்​ட​ணத்தை தகவல் பலகை​யில் வெளி​யிட வேண்​டுமென தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநரகம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்பாக தனி​யார் பள்​ளி​கள் இயக்குநர் சுகன்​யா, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: தனி​யார் பள்​ளி​கள் அனைத்​தும் கல்விக் கட்டண விவரங்​கள் அடங்​கிய தகவல் பலகையை பெற்​றோர்​கள் மற்​றும் மாணவர்​கள் அறி​யும் வகை​யில் வெளிப்​படை​யாக வைக்க வேண்​டும்.

வகுப்​பு​வாரி​யாக மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணத்தை அனைத்து பள்​ளி​களும் அச்​சிட்டு வழங்க வேண்​டும். அதனுடன், பள்​ளி​களின் இணை​யதளங்​களில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். கல்விக் கட்​ட​ணத்​தைத் தவிர இதர கட்​ட​ணங்​களை வசூலிக்​கக்​ கூ​டாது.

இந்த வழி​முறை​களை பின்​பற்றி அனைத்து தனி​யார் பள்​ளி​களும் ஜூன்​-5-ம் தேதிக்​குள் கல்விக் கட்டண தகவல்​களை விளம்​பரப்​படுத்த அறி​வுறுத்த வேண்​டும். அது​ சார்ந்த விவர அறிக்​கையை இயக்​குநரகத்​தில் ஜூன்​ 10-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்.

அதே​போல், தனி​யார் பள்​ளி​களில் கல்விக் கட்டண விவரங்​களை தகவல் பலகை​யில் இருப்​பதை முதன்​மை, மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் உறு​தி​ செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT