காட்பாடி அருகே மந்தி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தேவாலய கட்டுமான பணியில் சாரம் சரிந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
வேலூர்: காட்பாடி அருகே தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந் துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் அருகே மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. தமிழக - ஆந்திர எல்லையோரம் உள்ள இந்த கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தின் மேல்தளம் அமைக்கும் பணி நேற்று நடை பெற்றது.
இதில், 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படு கிறது. நேற்று மாலை சுமார் 4 மணியளவில் மேல்தளம் சாரம் திடீரென சரிந்து விழுந் ததில் தொழிலாளர்கள் இடி பாடுகளில் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்த தகவலறிந்த காட்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர். 12 பேர் லேசான காயங் களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 6 பேருக்கு படு காயம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேர்க்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளில் பெங் களூருவைச் சேர்ந்த ஒப்பந்த தாரர் ஜான், இமானுவேல், சாமுவேல் ஆகியோர் சிக்கி கொண்டதாக கூறப்பட்டது.
ஆட்சியர் ஆய்வு
இதற்கிடையில், அரக் கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மோப்ப நாய்கள் பிரின்ஸ், ஜாக், லாரா மற்றும் ராம்போ ஆகியவற்றுடன் மீட்புப் பணியை விரைவு படுத்தினர். சிமென்ட் கலவை இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஜான், இமானுவேல், சாமுவேல் ஆகியோர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், வேலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் (பொறுப்பு) சிபின், காட்பாடி எம்எல்ஏ சுதாகர் ஆகியோர் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த விபத்து தொடர்பாக திருவலம் போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.