தமிழகம்

எஸ்சி, எஸ்டி மேம்பாட்டுக்கு ஒதுக்கிய ரூ.28.54 கோடி நிதி நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் எஸ்சி, எஸ்டி மேம்​பாட்டு நிதி ரூ.28.54 கோடி நெடுஞ்​சாலைத் துறைக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டது தொடர்​பான வழக்​கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை ஒத்​தக்​கடையைச் சேர்ந்த தீரன் திரு​முருகன், உயர்​நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் எஸ்சி, எஸ்டி மேம்​பாட்டு நிதி ரூ.28.54 கோடி நெடுஞ்​சாலைத் துறைக்கு மாற்​றப்​பட்டு 12 பணிகளுக்கு செல​விடப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக தணிக்கை செய்​ய​வும், அதில் முறைகேடு நடந்​திருந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீது துறைரீதி​யான நட​வடிக்கை எடுக்​கவும், முறைகேடு செய்​யப்​பட்ட நிதியை திரும்ப வசூலிக்​கவும் நட​வடிக்கை எடுக்க வேண்​டும்.

ஒரு துறை​யின் நிதியை இன்​னொரு துறைக்கு மாற்​றம் செய்​வது தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசா​ரணை நடத்​தவும், எஸ்சி, எஸ்டி மேம்​பாட்​டுக்​கான நிதியை பிற அரசு துறைகளுக்கு மாற்​றம் செய்​வதை நிறுத்​தவும், இதற்​காக உரிய நடைமுறைகளை உரு​வாக்​கவும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் பி.வேல்​முருகன், கே.கே.ராமகிருஷ்​ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், “அரசிடம் கேட்​டால் எஸ்சி, எஸ்டி திட்​டத்​தின் பலனை பெறும் பயனாளி​கள் இல்லை என்​பார்​கள். அனைவரும் நல்ல நிலைக்கு உயர்ந்து விட்​டார்​களா? பயனாளி​களை கண்​டு​பி​டிக்​காமல் நிதியை வேறு துறைக்கு மாற்​று​வது எப்​படி?” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், மனு தொடர்​பாக எஸ்சி, எஸ்டி நலத்​துறை இயக்​குநர், நெடுஞ்​சாலைத் துறை தலைமை பொறி​யாளர், ஊழல் தடுப்​புத் துறை இயக்​குநர் பதிலளிக்க உத்​தர​விட்டு, இதே கோரிக்கை தொடர்​பான மற்​றொரு மனுவுடன் சேர்த்து டிச. 8-ல் விசா​ரணைக்கு பட்​டியலிட உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT